Homeகிரிக்கெட்23 ரன்களில் மொத்த விக்கெட்டும் காலி.. அசால்டாக செய்யப்பட்ட உலக சாதனை... தீபக்சாகர், சாகல் எல்லாம்...

23 ரன்களில் மொத்த விக்கெட்டும் காலி.. அசால்டாக செய்யப்பட்ட உலக சாதனை… தீபக்சாகர், சாகல் எல்லாம் ஓரம் போங்க..

-Advertisement-

ஐசிசி 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று மலேசியாவில் நடைபெற்றது. இதில் முதல் நாளில் சீனாவும் மலேசியாவும் பலப் பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சீன அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் சீன வீரர்கள் படுமோசமாக விளையாடினர். தாங்கள் கிரிக்கெட்டுக்கு புதியவர்கள் என்பதை நிரூபித்த சீன வீரர்கள் மலேசிய வீரர் இதுரூஸ் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தடுமாறினர்.

-Advertisement-

இதனால் சீனா அணி 11.2 ஓவரில் 23 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் சீனாவின் தொடக்க வீரர் Wei guo lei அதிகபட்சமாக 7 ரன்கள் சேர்த்தார். சீன அணியின் பேட்டிங் வரிசையில் ஆறு பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இதில் பாக்கி ஐந்து பேர் ஒற்றை இலக்கம் ரன்கள் தான் சேர்த்தனர். இதில் 5 எக்ஸ்ட்ரா ரன்களும் சேரும். மலேசிய பந்துவீச்சாளர் இதுரூஸ் நான்கு ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இத்ருஸ் படைத்தார்.

-Advertisement-

இதற்கு முன்பு தீபக்சாகர், சாகல் எஸ்டன் ஏகார், அஜந்தா மண்டிஸ் உள்ளிட்ட 12 வீரர்கள் ஒரு ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது இதிரூஸ் உடைத்திருக்கிறார். ஐசிசி டி20 கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து கிரிக்கெட் போட்டிக்கும் சர்வதேச அந்தஸ்தை வழங்கி இருக்கிறது.

இதன் மூலம் சிறு அணிகள் இப்படி மோசமான ரெக்கார்டுகளை படைப்பது வேடிக்கையாகி விட்டது. இதனால் கிரிக்கெட்டின் தரம் குறைந்து விட்டதாக ரசிகர்களும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

அனைத்து அணிகளும் டி20 கிரிக்கெட்டில் விளையாட வைப்பது நல்ல விஷயமாக இருந்தாலும் குறைந்தபட்சம் தரம் என்று ஒன்று இருக்க வேண்டாமா என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுரூஸ் இந்த சாதனையை நிகழ்த்தினாலும் இது எந்த அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது? அவர்களுடைய திறமை என்ன போன்ற கேள்விகளும் கூடவே எழுந்து இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

-Advertisement-

சற்று முன்