- Advertisement -
Homeவிளையாட்டுமும்பை வீரர்கள் குறித்து கிரிஸ் கெயில் கூறிய கருத்து. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - அப்படி என்ன...

மும்பை வீரர்கள் குறித்து கிரிஸ் கெயில் கூறிய கருத்து. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?

- Advertisement-

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த உலகக் கோப்பை தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் கைப்பற்றாமல் இருப்பதினால் இம்முறை கோப்பையை கைப்பற்றியாக வேண்டும் என்கிற முனைப்புடன் களமிறங்க இருக்கிறது.

இன்னும் உலகக்கோப்பை தொடருக்கு மூன்று மாதங்களுக்கு குறைவாகவே இருக்கும் வேளையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரரான கிரிஸ் கெயில் இந்த 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கீ பிளேயராக இருக்கப்போகும் வீரர்கள் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் மீண்டும் தனது சிறப்பான பார்முக்கு திரும்புவார். அதேபோன்று சூரியகுமார் யாதவும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இவர்கள் இருவருமே கீ பிளேயராக இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து தான் தற்போது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில் பும்ரா காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அவர் இதுவரை பந்துவீசும் அளவிற்கு உடற்தகுயுடன் இருக்கிறாரா என்பது குறித்த முழுமையான தகவல் கூட தெரியவில்லை. அதேபோன்று சூரியகுமார் யாதவும் கடைசியாக தான் விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.

- Advertisement-

டி20 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் கிரிஸ் கெயில் கீ பிளேயராக இருப்பார்கள் என்று கூறியுள்ளதால் ரசிகர்கள் கிரிஸ் கெயிலை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர்கள் இருவருமே அந்த அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடுவார்களே தவிர சர்வதேச கிரிக்கெட்டில் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்