வீடியோ: 10 பந்தில் 54 ரன்கள்.. 6,6,6,6,6,6,6,4,4,4.. சரவெடி அதிரடி.. தெறிக்கவிட்ட ஜார்டன்

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ரன்கனை வாரி வழங்கும் வள்ளலாக இருந்தவர்தான் கிறிஸ் ஜார்டன், இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான இவருக்கு பேட்டிங்கும் ஓரளவுக்கு வரும். சிஎஸ்கே அணியில் இவர் இடம் பெற்று இருந்தபோது தோனி அவருக்கு சில வாய்ப்புகளை தந்தார்.

ஆனால் அதில் இவர் தொடர்ந்து தடுமாறியதால் சிஎஸ்கே அணியில் இருந்து கிறிஸ் ஜார்டன் நீக்கப்பட்டார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற ஜார்டன் அங்கேயும் ரன்களை வாரி வழங்கும் வீரராக திகழ்ந்தார். கேதர் ஜாதவ் போன்ற வீரர்களை கூட மன்னித்து அணியில் வைத்திருந்த தோனி, ஜார்டனை தூக்கி விட்டதால் ரசிகர்களும் தோனியே கோபப்படுத்திய வீரர் என்று கிறிஸ் ஜார்டனை கிண்டல் செய்தார்கள்.

- Advertisement -

ஆனால் கிறிஸ் ஜார்டன் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சாதனைகளை படைத்திருக்கிறார். ஒவ்வொரு அணிகளும் 100 பந்துகளை எதிர்கொள்ளும் இந்த தொடரில் பிரேவ்ஸ் அணிக்காக கிறிஸ் ஜார்டன் களமிறங்கினார்.

76 ரன்களுக்கு எட்டு விக்கெட் இழந்து பிரேவ் அணி தடுமாறிய போது, தனது அணியின் பெயரை நிலைநாட்டுவது போல் தைரியமாக பந்துகளை சிக்ஸர் பௌண்டரிகள் என அடிக்க ஆரம்பித்தார் ஜார்டன். ஜார்டனா இப்படி அடிப்பது என இங்கிலாந்து வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். யார் பந்து வீசினாலும் அடிதான்! உதைதான்! என்பதை போல் ஜார்டன் அதிரடியை காட்டினார்.

- Advertisement -

32 பந்துகளை எதிர்கொண்ட ஜார்டன் 70 ரன்களை விரட்டினார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். குறிப்பாக தொடர்ந்து ஏழு சிக்ஸர்கள் பறக்க விடப்பட்டது. இதன் காரணமாக பிரேவ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து களமிறங்கிய பையர் அணி நூறு பந்துகளில் 145 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்தப் போட்டியில் களமிறங்கி பேட்டிங்கில் சாதித்த ஜார்டன் ஆட்ட நாயகன் என்பதை தட்டி சென்றார். பலரும் ஜார்டன் உடம்பில் வேறு ஏதேனும் அதிரடி வீரரின் ஆவி புகுந்து விட்டதா என கேட்கும் அளவிற்கு ரசிகர்கள் நம்பாமல் தங்களையே இது கனவா நிஜமா என கிள்ளி கொள்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்