- Advertisement -
Homeவிளையாட்டுகோலி, கம்பீர்கிட்ட இப்படி ஒரு ஒற்றுமை இருக்கு... வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத சிறப்பு..

கோலி, கம்பீர்கிட்ட இப்படி ஒரு ஒற்றுமை இருக்கு… வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத சிறப்பு..

- Advertisement-

கோலி மற்றும் கம்பீர் என இருவரின் பெயரை கேட்டதும் உடனடியாக நமது நினைவுக்கு வருவது அவர்களுக்கு இடையே இருந்த மோதல்கள் மட்டும் தான். ஒரு சில முறை அவர்கள் மாறி மாறி வாக்குவாதங்களில் ஈடுபட்ட நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு அணிகளில் ஆடினாலே அதற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஏதாவது சண்டை நடக்குமா என காத்திருப்பது ஒரு வித பரபரப்பையும் ஏற்படுத்தி விடும்.

அப்படி இருக்கையில் தான் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், ஆர்சிபி வீரர் விராட் கோலியை பார்த்ததும் புன்னகைத்துக் கொண்டே அவரை கட்டித் தழுவி இருந்தார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வந்ததுடன் மட்டும் இல்லாமல் தற்போது கம்பீரும் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறி உள்ளார். கம்பீர் பயிற்சியில் விராட் கோலி இன்னும் தனது பேட்டிங்கை பலப்படுத்தி தயாராகி வரும் சூழலில், அவர்கள் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

கோலி மற்றும் கம்பீர் என இருவருமே டெல்லியை சேர்ந்தவர்கள் என்ற சூழலில் அவர்களுக்கு இடையே பிரச்சனை இருப்பதாக ஊடகங்கள் செய்திகளை எழுதிக் கொண்டிருக்க அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தது இந்த கூட்டணி. இதனிடையே டெல்லி கிரிக்கெட் அணிக்காக ஆடியவரும், அதன் பின்னர் கிரிக்கெட் அரங்கில் சிறந்த நடுவராகவும் வலம் வந்த அணில் சவுத்ரி, கம்பீர் மற்றும் கோலி குறித்து சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“நான் டெல்லி அணிக்காக ஆடியிருந்த போது இருவருடனும் இணைந்து ஆடி உள்ளேன். அவர்கள் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் ஆடி வருவதால் நன்றாகவும் ஞாபகம் உள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் ஓடும் நேரத்தில் கோலி மற்றும் கம்பீர் ஆகியோர் இரண்டு ரன்கள் ஓடி விடுவார்கள். இந்த இருவரும் 100 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் நிச்சயம் ஒரு பேட்ஸ்மேன் ரன் அவுட்டாகி விடுவார்.

அவர்கள் தங்கள் வயதை விட வேகமாக இருப்பதால் அதே வயதை ஒத்த மற்ற வீரர்களால் இணைந்து ரன் ஓடவே முடியாது. வேகம், ஆக்ரோஷம் என அனைத்திலும் மற்ற அனைவரிடமும் இருந்து கம்பீர் மற்றும் கோலி ஆகிய இருவரும் வேறுபட்டு நிற்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 40 ஓவர் போட்டிகளில் கூட அவர்கள் அசாதாரணமாக 125 முதல் 150 ரன்கள் வரை சேர்த்து விடுவார்கள்” என அணில் சவுத்ரி கூறி உள்ளார்.

சற்று முன்