அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரரான ரகீம் கார்ன்வால் சிபிஎல்லில் 101 மீட்டர் தூரம் இமாலய சிக்சர் அடித்துள்ளார். அவர் அடித்த அடியில் பந்து மைதானத்தை விட்டே வெளியே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொதுவாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் என்றாலே பவர் ஹிட்டர்களாகவே கருதபடுவார்கள். அதில் ரகீம் கார்ன்வாலும் விதிவிலக்கில்லை. டி20யில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இருப்பினும் அவர் அதிக எடை (சுமார் 143 கிலோ) கொண்ட வீரராக இருப்பதால் அவரது அதிரடி ஆட்டத்திறனை விட, அவரது உடல் எடையை வைத்தே அவரது திறனை சிலர் மதிப்பீடுவது வேதனையளிக்கும் செயலாக இருக்கிறது.
தற்போது நடைபெற்றுவரும் சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில் தனது முதல் பந்திலேயே சிங்கிள் எடுக்க முடியாமல் அவர் ரன் அவுட் ஆனதை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்துவந்தனர். தற்போது அவர்களது வாயடைக்கும் வகையில் இமாலய சிக்சர் ஓன்றை அடித்துள்ளார்.
பார்படாஸ் ராயல்ஸ் – செயின்ட் லூசியா கிங்க்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கெனின்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணியில் மேயர்ஸ் உடன் தொடக்க வீரராக ரகீம் கார்ன்வால் களமிறங்கினார். மேத்யூ ஃபோர்டே வீசிய 3வது ஓவரின் 2வது பந்திலேயே லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார் கார்ன்வால்.
பின் நான்காவது பந்தில் ஸ்லோயர் பந்தை வீசி கார்ன்வாலை ஆட்டமிழக்க ப்ளேன் செய்தார். ஆனால் அதை சுதாரித்துகொண்ட கார்ன்வால் க்ரீஸில் இருந்த படியே பேக்வர்ட் ஸ்கோயர் திசையில் 101 மீட்டர் இமாலய சிக்சர் அடித்தார். அவர் அடித்த அடியில் பந்து க்ரவுண்டை விட்டே வெளியே சென்றுவிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் வாயடைந்தனர்.
101 meters!
Cornwall hits it out of the park 🤯#CPL2023 #CPLonFanCode pic.twitter.com/fKNGmBTUWO— FanCode (@FanCode) September 3, 2023
இந்த வீடியோவை சிபிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தொடர்ந்து ஆடிய கார்ன்வால் 18 ரன்களில் வெளியேற பார்படாஸ் ராயல்ஸ் அணி 105 ரன்களில் ஆட்டமிழந்தது. இருப்பினும் கார்ன்வால் அடித்த இந்த இமாலய சிக்சர்தான் இந்தபோட்டியை பேசும் பெருளாக மாற்றியது என கூறலாம்.