- Advertisement -

சிஎஸ்கே 6 வருசமா கட்டிக்காத்து வந்த சாதனை.. 12 போட்டிகளில் வேட்டு வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..

ஹைதராபாத் அணி இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடிய அதே வேளையில் சிஎஸ்கே அணி கடந்த ஆறு ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த பெருமை ஒன்றை தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளது. லக்னோவிற்கு எதிராக ஹைதராபாத் அடித்த அடிக்கு முதலில் பேட்டிங் செய்திருந்தால் நிச்சயம் 300 ரன்களை ஐபிஎல் போட்டியில் கடந்து புதிய வரலாறை மீண்டும் அவர்களே உருவாக்கி இருப்பார்கள்.

கொஞ்சம் கூட லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களை கண்டு அசராமல் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் அடிப்பதே முழு நேர வேலையாக இந்த போட்டியில் வைத்திருந்ததால் அவர்கள் 166 ரன்கள் என்ற இலக்கை சரியாக 58 பந்துகளில் சேஸ் செய்து இதன் விதியையே மாற்றி எழுதியிருந்தனர்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது சற்று பலவீனமாக இருந்து வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது அதிலுமே புதுமைகளை உருவாக்கி வரலாறு படைத்துள்ளது. போட்டிக்கு போட்டி புதிய சாதனைகளை உருவாக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களின் ஐபிஎல் வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனைக்கும் சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் 160 க்கும் மேற்பட்ட ரன்களை எந்த அணிகளும் 10 ஓவர்களில் சேஸ் செய்தது கிடையாது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் 10 ஓவர்களில் 160 ரன்களைத் தொட்ட முதல் அணியாகவும் அவர்கள் மாறி உள்ளனர். இப்படி திரும்பும் அனைத்து பக்கங்களும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த வெற்றியின் காரணமாக புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் நெகடிவாக இருந்த அவர்களின் ரன் ரேட் தற்போது மிக அதிகமாக உயர்ந்ததுடன் மட்டுமில்லாமல் இன்னும் ஒரு போட்டியில் வென்றால் பிளே ஆப்பை உறுதி செய்து விடலாம் என்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் ஆறு வருட சாதனை ஒன்றை 12 போட்டிகளில் முறியடித்து வரலாறு படைத்துள்ளது ஹைதராபாத் அணி.

அதாவது ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக சிஎஸ்கே இருந்து வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 16 போட்டிகள் ஆடி 145 சிக்ஸர்களை அடித்திருந்தது சிஎஸ்கே. ஒரு ஐபிஎல் சீசனில் ஒரு அணி தனியாக அடித்து அதிகபட்ச சிக்ஸர்கள் எண்ணிக்கையாக இவைதான் இருந்தது. ஆனால் இதனை தற்போது முறியடித்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 போட்டிகளிலேயே 146 சிக்ஸர்களை அடித்துள்ளதால் மீதமுள்ள போட்டிகளில் ஆடும் பட்சத்தில் நிச்சயம் மிகப்பெரிய எண்ணிக்கையாகவே அவை மாறும் என்றும் தெரிகிறது.

அது மட்டுமில்லாமல், இந்த சீசனில் இதுவரை 35 சிக்ஸர்கள் நடித்துள்ள அபிஷேக் ஷர்மா, அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts