- Advertisement 3-
Homeவிளையாட்டுடு பிளசிஸ்சா கான்வேவா? யாருடன் களமிறங்குவது பெஸ்ட்? ஆட்டநாயகன் ருத்துராஜ் பேட்டி

டு பிளசிஸ்சா கான்வேவா? யாருடன் களமிறங்குவது பெஸ்ட்? ஆட்டநாயகன் ருத்துராஜ் பேட்டி

- Advertisement-

நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே நான்கு முறை சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டமுடிவில் 7 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் சிறப்பாக திட்டமிடப்பட்ட பவுலிங் மற்றும் தோனியின் அபார கேப்டன்சி ஆகியவற்றால் போட்டியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisements -

இந்த போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்களை சேர்த்தார். அவரின் இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடக்கம். பின்னர் பீல்டிங்கில் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் அரைசதம் அடித்த ஒரே வீரர் ருத்துராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தடுமாற்றத்தில் இருந்து மீண்டு வந்தது, தனது சக தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே பற்றியெல்லாம் பேசியுள்ளார்.

- Advertisement-

அவரது பேச்சில் “சென்னையில் கடந்த 3-4 ஆட்டங்கள் வித்தியாசமானவை. அவற்றில் நான் தடுமாறினேன். முதல் சில ஆட்டங்களில் விக்கெட் சிறப்பாக இருந்தது. அதனால் என்னுடைய பேட்டிங்கை  அதற்கேற்றவாறு மாற்றியமைக்க வேண்டியிருந்தது. ஸ்ட்ரைக்கை சுழற்றி ரன்களை சேர்க்க முயன்றேன். லூஸ் டெலிவரிகளைப் பயன்படுத்தி சில ஷாட்களை ஆடினேன் என்றார்.

இதையும் படிக்கலாமே: குஜராத் மேட்ச்கு பிறகு ஜடேஜா போட்ட ஒற்றை ட்வீட். கலங்கி நிற்கும் தோனி ரசிகர்கள். எங்க அணிக்கு வந்துடுங்க என கூறும் பிற அணி ரசிகர்கள்

டு பிளசிஸ் மற்றும் கான்வே ஆகிய இருவரோடும் நீங்கள் களமிறங்கி உள்ளீர்கள். இதில் எந்த பார்ட்னெர்ஷிப் சிறப்பாக இருந்தது என்று நெறியாளர் கேட்க, என்னுடன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய டு பிளசிஸ் மற்றும் கான்வே ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள். ஃபாஃப் முதல் பந்திலிருந்து ஆக்ரோஷமாக விளையாடி ரன்களை சேர்க்க முயலும் ஒருவர். கான்வே சிறந்த பேட்ஸ்மேன்ஷிப்பைக் கொண்டவர். நான் பிடித்த கேட்ச் மற்றும் அடித்த 60 ரன்கள் இன்னிங்ஸில் எனது பேட்டிங்கையே நான் சிறந்ததாகக் கூறுவேன்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்