- Advertisement -
Homeவிளையாட்டுஅப்படி நடந்தா ஜெயிச்சுருப்போம்.. நாங்க கோட்டை விட்ட இடமே இதான்.. ஹைதராபாத் ஜெயிக்க காரணம்.. ருத்துராஜ்...

அப்படி நடந்தா ஜெயிச்சுருப்போம்.. நாங்க கோட்டை விட்ட இடமே இதான்.. ஹைதராபாத் ஜெயிக்க காரணம்.. ருத்துராஜ் வெளிப்படை..

- Advertisement-

சிஸ்கேவின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் முதல் இரண்டு போட்டிகளை அவர்கள் ஆடியிருந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தங்களின் 3 வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே எதிர்கொண்டது.

இந்த போட்டியில், சிஎஸ்கே அணி தோல்வி அடைய டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வெற்றி பாதைக்கும் சிஎஸ்கே திரும்ப வேண்டும் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்க, ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முஸ்தாபிசுர் ரஹ்மான், பதிரானா உள்ளிட்டோர் போட்டியில் இடம்பெறாமல் போக, மொயீன் அலி, முகேஷ் சவுத்ரி, மஹீஷ் தீக்ஷனா உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்திருந்தனர். இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய, ஷிவம் துபேவை தவிர எந்த வீரரும் அதிரடியாக ஆடி ரன் சேர்க்கும் நோக்கத்தில் ஆடியது போல தெரியவில்லை.

ஹைதராபாத் அணியும் ஸ்லோவர் பந்துகளை அதிகமாக வீசி, சிஎஸ்கே அணியை தடுமாற வைக்க, ஸ்கோர் ஏறவே நிதானம் கண்டது. ஷிவம் துபே 4 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 190 ரன்கள் மேல் எடுக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் கையில் விக்கெட் இருந்த போதும் கூட கடைசி ஓவர் வரை ஜடேஜா மற்றும் மிட்செல் இணைந்து ரன் சேர்க்கவே திணறினர்.

- Advertisement-

5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டும் சிஎஸ்கே அணி எடுக்க, இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியும் அசால்டாக டீல் செய்திருந்தது. முதல் ஓவரில் இருந்தே அவர்கள் அதிரடியை தொடங்க, சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் குழம்பி போயினர். பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்களையும் அவர்கள் எடுக்க, சிஎஸ்கே அணியின் தோல்வியும் உறுதியானது.

இதன் பின்னர் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் ஹைதராபாத் அணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, இந்த தொடரில் ஆபத்தான அணியாகவும் கருதப்பட்டு வருகிறது.

தொடர் தோல்விகளுக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், “இது மிகவும் ஸ்லோவான பிட்ச். ஹைதராபாத் அணி சிறப்பாக பந்து வீசி இருந்தது. கடைசி 5 ஓவர்களில் போட்டியை எங்களால் முன்னெடுத்து செல்ல முடியவில்லை. முதல் பாதியில் நன்றாக ஆடிய போதும், அடுத்த பாதியில் ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்பட்டது.

பந்து இங்கே பழையதாக அது ஸ்லோவாக மாறவும் தொடங்கியது. ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் சூழலை புரிந்து கொண்டு செயல்பட்டனர். 170 – 175 ரன்கள் வரை எடுத்து, பவர்பிளேவில் நன்றாக பந்துகளை வீசி இருந்தால் நாங்கள் வென்றிருக்க கூட வாய்ப்பு உருவாகி இருக்கும். கடைசி நேரத்தில் டியூ இருக்க, 15 – 16 வது ஓவரை மொயீன் அலி ஸ்பின் செய்து வீசி இருந்தார்” என ருத்துராஜ் கூறினார்.

சற்று முன்