இணையத்தில் தோனி குறித்து சமீப காலமாக வெளிவந்த தகவலை சிஎஸ்கே அணி தரப்பில் தற்போது மறுத்து உண்மை என்ன என்பதை பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளார் சிஇஓ காசி விஸ்வநாதன். அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் வேளையிலும் அது தொடர்பான வேலைகள் மும்முரமாக பிசிசிஐ நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள இதில் பல விஷயங்கள் குறித்த விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால் அனைத்து அணிகளும் தெரிவித்த கருத்துக்கள் நேர்மாறாக இருந்ததால் பிசிசிஐ தான் விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்கள் தொடங்கி ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகள் வரையிலும் முரண்பாடு நிறைய இருக்க விரைவில் ரசிகர்களுக்கு இதற்கான விடையும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் குறைந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ அறிவித்தால் சிஎஸ்கே அணியில் தோனி ஆடுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.
இதனால் 2021 ஆம் ஆண்டு வரை இருந்த விதி ஒன்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் சிஎஸ்கே தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்கள் Uncapped ப்ளேயராக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அந்த விதியை மீண்டும் கொண்டு வந்தால் தோனி குறைந்த தொகையில் சிஎஸ்கே அணியில் இடம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் இது பற்றி தற்போது சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் தோனி மற்றும் பிசிசிஐ பழைய விதி விவகாரம் தொடர்பாக சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்த பேட்டி ஒன்றில் “தோனியை பழைய விதியை கொண்டு வந்து தக்க வைத்துக் கொள்ளும்படி வந்த தகவலில் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.
பிசிசிஐ தான் இந்த முடிவை முன்வந்து Uncapped பிளேயர் விதி ஒன்று இருப்பதாகவும் அதை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த விதி பற்றி பிசிசிஐ இன்னும் எந்த இறுதி முடிவையும் அறிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.