- Advertisement -
Homeவிளையாட்டுதோனி அடுத்த வருஷம் ஆடாம கூட போகலாம்.. எங்க டீமோட முடிவு இதான்.. வெளிப்படையாக பேசிய...

தோனி அடுத்த வருஷம் ஆடாம கூட போகலாம்.. எங்க டீமோட முடிவு இதான்.. வெளிப்படையாக பேசிய சிஎஸ்கே சிஇஓ..

- Advertisement-

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக அதிகாரபூர்வ விதிகள் வெளியிடப்பட்டதும் மிகுந்த உற்சாகத்திற்கு ஆளானது சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள் தான். அவருக்கு தற்போது 43 வயதாவதால் மெகா த்தை முன்னிட்டு அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆட முடியாது என்பதால் நிச்சயம் அவருக்கு பதிலாக இளம் வீரர்களை தான் சிஎஸ்கே சேர்க்க போகிறார்கள் என்றே கருதப்பட்டது.

அப்படி சிஎஸ்கே இந்த முடிவை எடுக்கவில்லை என்றாலும் அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிச்சயம் தோனி அணியில் இருந்து விலகுவார் என்றும் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வந்தனர். ஆனால் அதே வேளையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளான வீரர்கள் Uncapped வீரர்கள் என்ற பட்டியலில் குறைந் தொகையில் தக்க வைத்துக் கொள்ளப்படலாம் என்றும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.

- Advertisement -

தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை பெற்று 5 காலண்டர் ஆண்டுகளாகி உள்ளதால், அவரை நான்கு கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் தக்க வைத்துக்கொள்ள முடியும். இதனால் அவருக்காக 10 கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டாம் என்பதால் நிச்சயம் சிஎஸ்கே அணி குறைந்த தொகையில் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி வந்தது.

அக்டோபர் 31ஆம் தேதிக்குள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது தொடர்பாக ஒவ்வொரு அணிகளும் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் பிசிசி உத்தரவிட்டுள்ளது. இதனால், சிஎஸ்கே அணியில் நிச்சயம் தோனி இருப்பார் என்று தான் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்.

- Advertisement-

ஆனால், அதே வேளையில் சென்னை அணிக்காக தோனி தொடர்ந்து ஆடுவது பற்றிய கேள்விக்கு சிஎஸ்கே சி காசி விஸ்வநாதன் தற்போது தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தைற்டுத்தி உள்ளது. “தற்போதைய கட்டத்தில் நாங்கள் இதை பற்றி எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. Uncapped வீரர் என்ற இடத்தை தோனி பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். தோனி தொடர்ந்து ஆடுவது பற்றி சொல்வதற்கா நேரம் இது இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதுவரையில் அவரிடம் இது பற்றி நாங்கள் எதுவுமே விவாதிக்கவில்லை.

தோனி தற்போது US-ல் இருக்கிறார். அவருடன் இன்னும் இது பற்றி எதுவுமே பேசவில்லை. இந்த வாரம் நான் அங்கே செல்ல இருப்பதால் அவருடன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதன் பின்னர் தான் இதில் கொஞ்சம் தெளிவு கிடைக்கும். அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆட வேண்டுமென்று தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது அவருடைய கையில் தான் உள்ளதுஎன சிஎஸ்கே அணியின் சி காசி விஸ்வநாதன் கூறி உள்ளார்.

சற்று முன்