நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியானது மகத்தான வெற்றியை பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது. கடந்த முறை ஐபிஎல்-லில் பெருமளவில் சொதப்பிய சிஎஸ்கே அணி இந்த முறை தனது தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டு மிகச்சிறப்பான ஒரு கம்பாக்கை கொடுத்தது என்றே கூறலாம் .கடந்த முறை ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.
ஆனால் அணியின் போக்கு சரியில்லாத காரணத்தினால் நடுவிலேயே தோனி கேப்டன்சி பொறுப்பை எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக ஜடேஜாவிற்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஜடேஜா தனது பங்கை தன்னால் முடிந்தவரை சிஎஸ்கே அணிக்காக கொடுத்தார் என்றால் அது மிகையாகாது.
அதேசமயம் இந்த முறையும் ஜடை ஜா குறித்து பல சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்தன. தோனிக்கும் ஜடை ஜாவிற்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது, அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜா விற்கும் இடையே மனக்கசப்பு உள்ளது போன்ற பல்வேறு தகவல்கள் பரவின. அதற்கு ஏற்றார் சமூக வலைதள பக்கங்களில் ஜடேஜா சில கருத்துக்களை பதிவிட்டது சர்ச்சைக்கு மேலும் வலு சேர்த்ததாக அமைந்தது.
இந்த நிலையில் உண்மையில் ஜடேஜா விற்கும் தோனிக்கு இடையில் ஏதாவது பிரச்சனை இருந்ததா? அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவிற்கும் இடையே ஏதாவது பிரச்சனை இருந்ததா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அவர்கள் ஒரு பேட்டி மூலம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஜடேஜா இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங்கை பொறுத்தவரை அவர் கடைசியில் 10-15 பந்துகளை மட்டுமே ஆடுவதற்கான வாய்ப்பு இருந்தது. அது போன்ற சமயங்களில் சில நேரம் கிளிக் ஆகும் சில நேரம் கிளிக் ஆகமலும் போகும். அதே சமயம் தோனி தான் அடுத்ததாக களத்திற்கு வருவார் என்பது ஜடேஜாவிற்கும் தெரியும்.
கடைசி சில பந்துகள் இருக்கும்போது அவர் அவுட் ஆகி செல்லுகையில், தோனிக்காக ரசிகர்கள் தங்கள் கரகோசங்களை எழுப்பி அவரை வரவேற்று, ஜடேஜாவை வழி அனுப்பினார்கள். அதனால் அவர் புண்பட்டிருக்கலாம். அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அவர் பதிவுகளை போட்டாலும் எங்களிடம் எந்த ஒரு புகாரும் அவர் கூறியது கிடையாது.
அதேபோல நான் ஜடேஜாவை சமாதான படுத்துவது போன்ற ஒரு வீடியோ வெளியானது. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருவருமே போட்டி குறித்து தான் அப்போது பேசினோம். வேறு எதையும் பேசவில்லை. தோனி மீது ஜடேஜா அளவற்ற மரியாதை கொண்டுள்ளார். பைனல் முடிந்த பிறகு அவர் தனக்கு கிடைத்த அவார்ட்டை தோனிக்கு டெடிகேட் செய்கிறேன் என்று கூறியதிலிருந்து அவர் தோனி மீது எவ்வளவு அன்பும், பற்றும், மரியாதையும் வைத்துள்ளார் என்பதை நம்மால் அறிய முடிகிறது என்று கூறியுள்ளார் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன்.