அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா?… சி.எஸ்.கே CEO காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!

- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதிகம் கவனம் பெறும் ஒரு அணியாகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாகவும் சிஎஸ்கே உள்ளது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது எப்போது அந்த அணி மீண்டும் விளையாட வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ள அணி, இரண்டு முறை தவிர மற்ற எல்லா முறையும் ப்ளே ஆஃப்க்கு சென்றுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார் தோனி. ஒரே அணிக்காக 200 போட்டிகளுக்கு மேல் அவர் கேப்டனாக இருந்து சாதனைப் படைத்துள்ளார். தற்போது 41 வயதாகும் தோனி, ஐபிஎல் விளையாடும் வீரர்களில் அதிக வயதுடைய வீரராக இருந்து வருகிறார்.  ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த சீசனோடு அவர் ஓய்வை அறிவிப்பார் என கருத்துகள் எழுந்துள்ளன.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு இது குறித்து ரெய்னா பேசுகையில், தோனி நிச்சயம் சென்னைக்கு கப் வாங்கி கொடுத்துவிட்டு அதன் பிறகு ஒரு சீசன் ஆடுவார் என்பது போல கூறி இருந்தார். இதனால் சென்னை ரசிகர்கள் அப்போதே சற்று பெருமூச்சு விட துவங்கினர்.

இந்த நிலையில் நேற்றை போட்டியின் முடிவிற்கு பிறகு, இந்த ஆண்டு சென்னையில் நடைக்கும் கடைசி லீக் போட்டியின் நிகழ்வை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு ரசிகர்களுக்கும் தோனிக்கும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாட மாட்டார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் வலுவாகியுள்ளது.

- Advertisement -

ஆனால் தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதில் சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்