- Advertisement -
கிரிக்கெட்

இப்ப மீம்ஸ் போடுங்கடா பாக்கலாம்.. பஞ்சாப் கிங்ஸ் ஆணவத்தை அடக்கிய சிஎஸ்கே.. பாயிண்ட்ஸ் டேபிளில் நடந்த ட்விஸ்ட்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் ஆடி ஐந்தில் வெற்றி பெற்ற நிலையில் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் அவர்கள் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர் கொண்டனர்.

இதற்கு முன்பாக இருவரும் மோதி இருந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்ததையடுத்து பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் ஆட்டம் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்த நிலையில் பஞ்சாப் அணியை அவர்களின் சொந்த மைதானமான தரம்சாலாவில் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கிலும் சிஎஸ்கே அணி களம் இறங்கி இருந்தது.

- Advertisement -

பந்து வீச்சில் பலமாக இருந்த தீபக் சாஹர், பதிரானா உள்ளிட்டோர் காயம் காரணமாக இனிமேல் களமிறங்க மாட்டார்கள் என்ற நிலையில் துஷார் தேஷ் பாண்டே, ரிச்சட் க்ளீசன் உள்ளிட்டோரை நம்பி தான் சிஎஸ்கே அணி களமிறங்கியிருந்தது.

அப்படி இருக்கையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 43 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இவரை தவிர மிட்செல் மற்றும் ருத்துராஜ் ஆகியோர் நல்ல பங்களிப்பை அளிக்க சிஎஸ்கே அணி 167 ரன்கள் சேர்த்திருந்தது.

- Advertisement -

மறுபுறம் மிடில் ஆர்டருக்கு பிறகு எந்த வீரர்களும் சிறப்பாக ஆடாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது சிஎஸ்கே. பேட்டிங்கில் பலமாக விளங்கும் பஞ்சாப் அணிக்கு இந்த இலக்கு குறைவாக இருக்கும் என்றுதான் கருதப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி மீண்டும் தோற்று பிளே ஆப் வாய்ப்பை இழக்க கூடுமோ என்ற பயமும் இருந்தது.

ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். அதிலும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். துஷார் தேஷ்பாண்டே 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்க்க, பஞ்சாப் அணி 78 ரன்களில் 7 விக்கெட் இழந்து தடுமாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் சேர்க்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், தங்களின் பிளே ஆப் வாய்ப்பையும் சிஎஸ்கே அதிகப்படுத்தியதுடன் முதல் தோல்விக்கு தரமான பதிலடியையும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கொடுத்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 3 வது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

- Advertisement -

Recent Posts