- Advertisement -
Homeவிளையாட்டுஓய்வை அறிவிக்க போகிறாரா தோனி? மிகவும் எமோஷனலான வீடீயோவை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம். மீண்டும் குழப்பத்தில்...

ஓய்வை அறிவிக்க போகிறாரா தோனி? மிகவும் எமோஷனலான வீடீயோவை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம். மீண்டும் குழப்பத்தில் ரசிகர்கள்.

- Advertisement-

சென்னை அணி நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் கோப்பையை வென்றதன் மூலம் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளாக சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸும் உள்ளன.

சென்னை அணிக்கு இந்த முறை எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது. சென்னை மைதானம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் சிஎஸ்கே போட்டிகள் எங்கு நடந்தாலும் ரசிகர்கள் மஞ்சள் டிஷர்ட் அணிந்து வந்து சிஎஸ்கேவுக்கு ஆதரவு அளித்தன.

அதற்கு முக்கியக் காரணம், தோனி இந்த சீசனோடு ஒய்வை அறிவிப்பார் என அவர்கள் எதிர்பார்த்ததுதான். தற்போது 41 வயதாகும் தோனியால் அடுத்த சீசன் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமில்லாமல் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அனைத்து போட்டிகளிலும் அவர் 7 அல்லது 8 ஆவது இடத்தில் இறங்கினார்.

ஐபிஎல் சீசன் முடிந்ததும் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யபப்ட்டுள்ளது. இதிலிருந்து தோனி எப்படி குணமாகி வருகிறாரோ அதை பொறுத்து அவர் அடுத்த ஐபிஎல்-ல் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும்.

- Advertisement-

ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்ததும் பேசிய தோனி “ஓய்வு பற்றி யோசிக்க இன்னும் 6 முதல் 9 மாதங்கள் உள்ளன. என் மீது அன்பைப் பொழியும் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு ஐபிஎல் சீசனாவது விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்கலாமே: சஞ்சு சாம்சன் தான் அடுத்த தோனி. நள்ளிரவில் நாங்கள் பேசிக்கொண்ட ரகசியம் இது தான் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிட்னெஸ் பயிற்சியாளர் ராஜாமணி பேச்சு

இந்நிலையில் இப்போது சிஎஸ்கே அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் தோனி குறித்த எமோஷனல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இந்த சீசன் முழுவதும் தோனியின் ஹீரோயிக் தருணங்கள் இடம்பெற்று ஒரு பிரிவு உபச்சார வீடியோ போல அமைந்துள்ளது. இப்போது ஏன் இந்த வீடியோ என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஒருவேளை நடந்து முடிந்த சீசன்தான் தோனியின் கடைசி தொடரோ என்ற ஐயமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

சற்று முன்