- Advertisement 3-
Homeவிளையாட்டுபோயும் போயும் உங்களையா அடுத்த சிஎஸ்கே கேப்டன்னு நெனச்சோம். எங்க கணக்கு எல்லாமே தப்பு -...

போயும் போயும் உங்களையா அடுத்த சிஎஸ்கே கேப்டன்னு நெனச்சோம். எங்க கணக்கு எல்லாமே தப்பு – பென் ஸ்டோக்ஸ் மீது ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement 1-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. குறிப்பாக அந்த போட்டியில் முதல் நாளிலேயே அதிரடியாக விளையாடி 393/8 ரன்கள் குவித்தும் தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் இங்கிலாந்து தோற்றது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டிக்காக முதல் நாளன்றே தங்களுடைய பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து மொய்ன் அலியை அதிரடியாக நீக்கியுள்ளது.

குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் பச்சை புற்களுடன் கூடிய பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஸ்பின்னரே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ள கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவரை கழற்றி விட்டு 5வது வேகப்பந்து வீச்சாளராக ஜோஸ் டாங்கை சேர்த்துள்ளது சிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகு முறையில் விளையாடி வரும் தங்களுடைய அணியில் நல்ல ஸ்பின்னர் இல்லாத நிலையில் அட்டாக் செய்வதற்காக 2019லேயே ஓய்வு பெற்ற மொயின் அலி போன்ற அனுபவம் மிகுந்தவர் வேண்டுமென்று கருதிய அவர் பேசி சம்மதிக்க வைத்து இத்தொடரில் தேர்வு செய்தார்.

ரசிகர்கள் அதிருப்தி:
அந்த நிலையில் 37 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் எடுத்து முதல் போட்டியில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட மொயின் அலியை ஒரு போட்டியில் தோற்றதற்காக அவசரப்பட்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை போல் இங்கிலாந்து நீக்கியுள்ளது. அதனால் இப்படி கழற்றி விடுவதற்காகவா 3 வருடங்கள் கழித்து ஓய்விலிருந்து அவரை கம்பேக் கொடுக்க வைத்தீர்கள் என்று பென் ஸ்டோக்ஸ் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

அத்துடன் தனது கம்பேக் போட்டியில் காயத்திற்காக நடுவரிடம் கேட்காமல் வலி நிவாரணையை பயன்படுத்தியதால் 25% அபராதம் மற்றும் இரண்டு கருப்பு புள்ளிகளை பெற்ற பரிதாபத்திற்கும் மொய்ன் அலி உள்ளனர். அதை விட ஐபிஎல் 2023 தொடரில் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்துடன் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இருப்பதால் 41 வயதை கடந்த தோனிக்கு பின் சென்னையின் அடுத்த கேப்டனாக செயல்பட தகுதியானவர் என அந்த அணி ரசிகர்கள் ஆரம்பத்தில் மனக்கணக்கு போட்டனர்.

- Advertisement 2-

ஆனால் சமீபத்தில் அஸ்வின் கூறியது போல பொதுவாகவே ஒரே 11 பேர் அணியை தொடர் முழுவதும் வைத்து 2011 உலக கோப்பை போன்ற வெற்றிகளை பெற்ற தோனி இந்த ஐபிஎல் தொடரில் கூட அனைவரும் விமர்சித்த துசார் தேஷ்பாண்டேவை வைத்து 5வது கோப்பையை வென்று சரித்திரம் படைத்தார். அப்படிப்பட்ட நிலையில் தோனி மட்டும் இங்கிலாந்தின் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயமாக அதுவும் 3 வருடம் கழித்து ஓய்விலிருந்து கம்பேக் கொடுத்த மொயின் அலியை இப்படி ஒரே போட்டியில் நீக்க மாட்டார் என உறுதியாக சொல்லலாம்.

இருப்பினும் அதை பென் ஸ்டோக்ஸ் செய்துள்ளதால் உங்களை போய் சென்னையின் அடுத்த கேப்டனாக வரவேண்டும் என தப்பு கணக்கு போட்டோமே என்று அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் இதே ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக வெறும் 2 போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு பெஞ்சில் அமர்ந்திருந்து சென்னை சார்பில் இலவச சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு நாடு திரும்பிய அவர் தோனியின் இடத்தை நிரப்பும் அளவுக்கு சரியானவர் கிடையாது என்றும் அந்த அணி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

சற்று முன்