- Advertisement -
Homeவிளையாட்டுராயுடுவிற்கு மாற்று என்ன ஆச்சி?... 15 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒருமுறை தான்... காசி...

ராயுடுவிற்கு மாற்று என்ன ஆச்சி?… 15 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒருமுறை தான்… காசி விஸ்வநாதன் சொன்ன தகவல்

- Advertisement-

13 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் சமீபத்தில் இந்தியாவில் வைத்து நடந்து முடிந்த சூழலில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, ஆறாவது முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றி சாதனை புரிந்தது.

மறுபக்கம், இந்திய அணியின் பொன்னான வாய்ப்பு நழுவி போன சோகத்தில் இந்திய ரசிகர்கள் இருக்க, அந்த சூட்டை தணிக்கும் வகையில் ஐபிஎல் குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மொத்தமுள்ள 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.

- Advertisement -

அதன்படி, அனைத்து அணிகளும் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அசந்து போய் பார்க்க வைத்த முடிவு என்றால், ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது தான். மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தை ஆரம்பித்து சர்வதேச அணியிலும் ஹர்திக் பாண்டியா ஜொலிக்க ஆரம்பித்தார்.

அப்படி இருக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக தோன்றிய குஜராத் டைட்டன்ஸ் அணி, அவரை டிரேடிங் முறையில் எடுத்ததுடன் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் நியமித்திருந்தது. முதல் ஆண்டிலேயே ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றதுடன் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தது. இதனால், ஹர்திக் பாண்டியா தொடர்ந்து குஜராத் அணிக்காக ஆடுவார் என்றே ரசிகர்கள் கருதினர்.

- Advertisement-

ஆனால், அவரை டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இப்படி பல அணிகள் மற்ற அணிகளில் இருந்து வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கிக் கொள்ளும் பழக்கம் அதிகம் உள்ளது. ஆனால், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அப்படியே நேர்மாறாக விளங்கி வருகிறது.

ஐபிஎல் வரலாற்றிலேயே சிறந்த அணியாக கருதப்படும் சிஎஸ்கே, இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. மற்ற அணிகள் சிறந்த வீரர்கள் பின்னால் ஓட, வயதான வீரர்களை கொண்டே அணியை சிறப்பாக வழிநடத்துவதில் தோனி கில்லாடி. இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனியின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கு மத்தியில், சமீபத்தில் பேசி இருந்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், கடந்த 15 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில், சிஎஸ்கே அணி ராபின் உத்தப்பாவை மட்டும் தான் டிரேடிங் முறையில் வாங்கி உள்ளது என்றும், இந்த முறை அம்பத்தி ராயுடுவுக்காக மாற்று வீரர்களை டிரேடிங் செய்ய தேடியும் யாரும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பலம் வாய்ந்த அணியாக சிஎஸ்கே ஐபிஎல் தொடர்களில் வலம் வந்த போதிலும் டிரேடிங் செய்யாமலே இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாகி மாறி உள்ளது.

சற்று முன்