- Advertisement 3-
Homeவிளையாட்டுசேப்பாக்ல அப்ப ஃபைனல்ஸ் ஆட முடியாதா.. குஜராத்திடம் பணிந்த சிஎஸ்கே.. வெறியோடு காத்திருக்கும் ஆர்சிபி..

சேப்பாக்ல அப்ப ஃபைனல்ஸ் ஆட முடியாதா.. குஜராத்திடம் பணிந்த சிஎஸ்கே.. வெறியோடு காத்திருக்கும் ஆர்சிபி..

- Advertisement 1-

மிக முக்கியமான கட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் சிஎஸ்கே அணி குஜராத் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தைப் பற்றித் தான் தற்போது பல கிரிக்கெட் ரசிகர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் ஆடி ஆறில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் நான்காவது இடத்தில் இருந்தனர்..

அதே வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் இருந்தனர். இன்னும் ஒரு போட்டியில் குஜராத் அணி தோற்றால் கூட பிளே ஆப் வாய்ப்பு பறிபோய்விடும் என்ற நிலையில் தான் சென்னை அணியையும் தற்போது அவர்கள் எதிர் கொண்டிருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் கில் ஆகிய இருவருமே சதம் அடித்து பட்டையை கிளப்பி இருந்தார்கள். 210 ஆக அணியின் ஸ்கோர் உயர்ந்த போது தான் முதல் விக்கெட்டை அவர்கள் இழந்திருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 231 ரன்களை எடுத்திருந்தது குஜராத்.

சாய் சுதர்சன் 103 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும் எடுக்க சென்னை அணியின் பந்து வீச்சு பலவீனம் இந்த போட்டியின் மூலம் வெளிப்படையாகவும் தெரியவந்துள்ளது. துஷார் தேஷ்பாண்டே மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் மற்ற அனைவருமே விக்கெட் எதையும் எடுக்காமல் அதிக ரன்களையும் வாரி வழங்கி இருந்தனர்.

- Advertisement 2-

தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய சிஎஸ்கே அணி குஜராத்திற்கு நேர்மாறான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. பத்து ரன்களை சேர்ப்பதற்குள் ருத்துராஜ், ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் விக்கெட்டை சிஎஸ்கே இழக்க, பின்னர் கைகோர்த்த மிட்செல் மற்றும் மொயீன் அலி இணைந்து ஓரளவுக்கு சிஎஸ்கேவை மீட்டெடுத்து வந்தனர்.

அப்படி ஒரு சூழலில், மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர்களையும் பறக்க விட்டிருக்க, இன்னொரு பக்கம் 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த டேரில் மிட்செல் அவுட்டானார். இதன் பின்னர் மொயீன் அலி, ஷிவம் துபே, ஜடேஜா, சாண்ட்னர் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை சிஎஸ்கே பறிகொடுக்க, அவர்களின் வெற்றி வாய்ப்பும் கைவிட்டு போனது.

கடைசி 2 ஓவர்களில் 62 ரன்கள் வேண்டுமென்ற நிலை உருவாக, குஜராத் அணியின் வெற்றியும் பலமாக மாறி இருந்தது. கடைசி 2 ஓவர்களில் தோனி 3 சிக்ஸர்களை பறக்க விட்டாலும், சென்னை அணியால் 196 ரன்களை மட்டுமே எடுக்க முடிய, 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்று, தங்களின் பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டுள்ளனர்

சற்று முன்