- Advertisement 3-
Homeவிளையாட்டுபென் ஸ்டோக்சின் சம்பளத்தில் கைவைத்த சிஎஸ்கே. அதுவும் எத்தனை கோடி தெரியுமா? காரணம் தான் அல்டிமேட்

பென் ஸ்டோக்சின் சம்பளத்தில் கைவைத்த சிஎஸ்கே. அதுவும் எத்தனை கோடி தெரியுமா? காரணம் தான் அல்டிமேட்

- Advertisement 1-

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 15-ஆவது ஐ.பி.எல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிபட்டியலில் 9-ஆவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறிய சென்னை அணியானது இம்முறை இந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் 2 ஆவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

அதோடு குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐ.பி.எல் வரலாற்றில் 10 ஆவது முறையாக ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில் இந்த தொடருக்கான சென்னை அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக நாடு திரும்பினார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக 16.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் 14 லீக் போட்டிகள் கொண்ட சுற்றில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். அதிலும் குறிப்பாக 1 ஓவர் மட்டுமே பந்துவீசியிருந்தார். இப்படி ஒரு நிலையில் எதிர்வரும் அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அவர் ஐ.பி.எல் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னதை சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறி நாடு திரும்பினார்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இருந்து பாதியில் வெளியேறிய அவருக்கான சம்பளத்தொகையில் தற்போது சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் கைவைத்துள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தில் இருந்து 20 % தொகையை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 78 லட்ச ரூபாயை சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் குறைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement 2-

இந்த ஆண்டு சி.எஸ்.கே அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ்ஸின் பங்களிப்பு என்பது சென்னை அணிக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்பதால் ரசிகர்கள் இனியும் அவர் நமது அணிக்கு தேவையா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். அதோடு அவருக்கு சம்பளத்தினை பிடிக்காமல் மொத்தமாக கொடுக்காமல் கூட விடலாம் என்று விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: 1 விக்கட்டுக்கு 4 கோடி கொடுத்தா இப்படி தான் ஆகும். இனிமேலாவது இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க என ட்ரோல் செய்யும் ரசிகர்கள்.

இதே போல லக்னோ அணி வீரரான மார்க் வுட்டும் தனக்கு குழந்தை பிறந்த காரணத்தால் சொந்த நாட்டிற்கு தொடரின் பாதியிலேயே திரும்பினார். இதன் காரணமாக அவருக்கும் சம்பளத்தில் 20% பிடிக்கப்போவதாக அவர் சார்ந்த லக்னோ அணி நிர்வாகம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்