- Advertisement -
Homeவிளையாட்டுதோனி இடத்தில் சிஎஸ்கே குறிவைக்க போகும் வெளிநாட்டு விக்கெட் கீப்பர்.. ஐபிஎல் மெகா ஏலத்தில் புது...

தோனி இடத்தில் சிஎஸ்கே குறிவைக்க போகும் வெளிநாட்டு விக்கெட் கீப்பர்.. ஐபிஎல் மெகா ஏலத்தில் புது ட்விஸ்ட்..

- Advertisement-

பல நாடுகளில் தற்போது இருதரப்பு தொடர்கள் பரபரத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஐபிஎல் பற்றிய செய்திகளும் இணையத்தில் வைரலாகாமல் இல்லை. அதிலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலமும் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அதற்கு முன் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மத்தியில் அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை தொடர்பான விஷயங்களில் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவிக்க பிசிசிஐ தான் இதில் இறுதி முடிவு எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அந்த அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் எண்ணிக்கை பற்றி தெரிவித்த பின்னர் தான் ஒவ்வொரு அணிகளும் யார் யாரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் யாரை விடுவிக்க வேண்டும் என்பது பற்றியும் இறுதி முடிவை எடுக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு மத்தியில் சர்வதேச போட்டிகள் அல்லது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஏதாவது ஒரு வீரர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்தால் மிகப் பெரிய அளவில் மெகா ஏலத்தில் தடம் பதிப்பார் என ரசிகர்கள் தொடர்ந்து கருத்துணை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிவேகமாக டி20 போட்டிகளில் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஜோஸ் இங்கிலிஸ் பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்தில் இடம் பிடித்தால் எந்தெந்த அணிகள் இவரை எடுக்கலாம் என்பது பற்றி ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement-

பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் விலகியதன் காரணமாக, அங்கே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடம் காலியாக உள்ளது. இதனால் அவர்கள் ஜோஸ் இங்கிலிஷை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக தெரிகிறது. இதேபோல குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் இருக்க விக்கெட் கீப்பராக செயல்படக்கூடிய அதிரடி வீரரான ஜோஸ் இங்கிலிஸை அவர்கள் எடுத்தால் நிச்சயம் இன்னும் மிடில் ஆர்டரில் அதிரடி சேர்க்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளை போலவே ஒரு விக்கெட் கீப்பரை அதிகம் எதிர்பார்க்கும் அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவிக்கலாம் என்பதால் அவர் அவருக்கு இணையான ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனையும் அந்த அணி தேடி வருகிறது.

இந்திய விக்கெட் கீப்பர் இல்லாமல் வெளிநாட்டு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டும் என அவர்கள் நினைத்தால் நிச்சயம் ஜோஸ் இங்கிலிஸை அணியில் சேர்க்கவும் முயற்சி செய்யலாம் என தெரிகிறது.

சற்று முன்