- Advertisement -
Homeவிளையாட்டு3 முறையும் சிஎஸ்கே-வ வச்சு செஞ்ச குஜராத் டைட்டன்ஸ். இந்த முறை சிஎஸ்கே-விற்கு காத்திருக்கும் சவால்கள்...

3 முறையும் சிஎஸ்கே-வ வச்சு செஞ்ச குஜராத் டைட்டன்ஸ். இந்த முறை சிஎஸ்கே-விற்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

- Advertisement-

ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தேர்வாகியுள்ளன. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் முதல் குவாலிஃபையர் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது.

இந்த சீசனில் பேட்டிங் , பவுலிங் மற்றும் ஃபீல்டிங்க் என அனைத்து துறையிலும் சிறப்பாக விளையாடி, 14 போட்டிகளில் 10 போட்டிகளை வென்று 20 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது குஜராத் டைட்டன்ஸ். அதே போல 14 போட்டிகளில் 8-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் அடைந்து ஒரு போட்டியில் முடிவு தெரியாமல் 17 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை மோதியுள்ளன. ஆனால் அந்த மூன்று முறையும் குஜராத் டைட்டன்ஸ் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசனில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்து பெரும் மார்ஜின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்.

இந்தாண்டு நடந்த ஒரு லீக் போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த மூன்று தோல்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக சென்னை அணி குவாலிஃபையர் போட்டியில் எழுச்சி பெறவேண்டும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இரு அணிகளும் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சமபலத்தோடு உள்ள நிலையில் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என உத்தரவாதமாக சொல்லலாம்.

- Advertisement-

குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் சுப்மன் கில் நல்ல ஒரு பார்மில் உள்ளார். RCB-க்கு எதிரான போட்டிக்கு பிறகு அவரே அதை குறிப்பிட்டுள்ளார். அதே போல பௌலிங்கை பொறுத்தவரை ரஷித் கான், ஷமி, மொகித் ஷர்மா, நூர் அகமது ஆகியோர் சிறப்பான ஒரு நிலையில் உள்ளனர். குஜராத் அணியின் பௌலிங் தான் அவர்களுக்கான மிகப்பெரிய ஒரு பலம் என்றே கூறலாம்.

அதே போல, குஜராத் அணி சேசிங் செய்த போட்டிகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர்கள் முதலில் பேட்டிங் செய்வது தான் சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும். அதற்கு சென்னை டாசில் ஜெயிக்க வேண்டும். அதே போல சென்னையின் துவக்க வீரர்கள் குஜராத்தின் பௌலிங்கை தவிடுபொடி ஆக்கி அவர்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஜடேஜாவின் சர்ச்சை ட்வீட் ஒருபுறம் இருக்க, அதற்கு அவருடைய மனைவி போட்ட ரிப்ளை வேற ரகத்தில் உள்ளது. என்ன தான்பா பிரச்சன?

இதை எல்லாம் கடந்து, இந்த குவாலிஃபையர் போட்டி சென்னையில் நடக்க உள்ளதால் அது சென்னை அணிக்கு சற்று சாதகம் என்றே கூறலாம். இதற்க்கு முன்பு சில போட்டிகளில் சென்னை அணி இந்த மைதானத்தில் தோற்றிருந்தாலும், மைதானத்தின் தன்மை சென்னை அணிக்கு நல்ல ஒரு பரிச்சயமானதாக இருக்கும். அதே சமயம் பார்வையாளர்களும் சென்னை அணிக்கு நல்ல ஒரு ஊக்கத்தை அளிப்பார்கள். எது எப்படியோ, இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும் என்பதால் இது ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது.

சற்று முன்