ரோகித் மேல் என்ன கோவம்? கோலி மற்றும் ரவிசாஸ்திரியை புகழ்ந்து சிஎஸ்கே பதிவிட்ட ரீட்வீட் – அப்படியே அலேக்காக தட்டி தூக்கிய நெட்டிசன்கள்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆட்டத்தில் இரண்டு நாட்கள் ஆட்டம் முடிந்துள்ளது. இந்த இரண்டு நாளிலும் ஆஸியின் கைகளே ஓங்கியுள்ளது. இந்திய அணி பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தடுமாறி வருகிறது.

முதல் நாளில் சிறப்பாக பந்துவீச்சை தொடங்கிய இந்திய அணி நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஜோடியை 285 ரன்கள் சேர்க்க விட்டது. இதனால் ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை அடைந்தது.

- Advertisement -

பின்னர் பேட்டிங் ஆடிய இந்திய அணி முன் வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வரிசையாக இழந்து தற்போது 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் சேர்த்துள்ளது. இது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவுதான். இந்த நிலையில் இருந்து இந்த போட்டியை வெல்வதற்கு வாய்ப்பே இல்லை எனும் சூழலில் டிராவுக்கே போராட வேண்டி இருக்கும்.

இந்நிலையில் இந்திய அணியின் ரசிகர்கள் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பவுலர் அஸ்வினை அணியில் எடுக்காமல் விட்டதுதான். அஸ்வின் ஆஸி அணிக்கு எதிராக சிறப்பான ரெக்கார்ட்களை வைத்துள்ளார்.  அப்படி இருந்தும் அவரை அணியில் எடுக்கவில்லை.

- Advertisement -

மேலும் இந்த போட்டிக்கு எந்த திட்டமும் இல்லாமல் வந்தது போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நெட்டிசன்கள் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருப்பதாக புகழ்ந்து, அது அனைத்தும் விராட் கோலி கேப்டன்சியிலும் ரவி சாஸ்திரியின் பயிற்சியிலும் தான் அமைந்தன என பதிவுகளாகவும் வீடியோக்களாகவும் ட்வீட் செய்து வருகின்றனர்.

அப்படி இருவரையும் புகழும் வகையில் “கோலி மற்றும் ரவி சாஸ்திரி தலைமையில் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவை நடப்பு ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கே அணியின் சமூகவலைதளப் பக்கம் ரிட்வீட் செய்தது. இதையடுத்து அந்த பதிவை பலரும் பார்த்தனர். ஆனால் சற்று நேரத்தில் அந்த பதிவை சிஎஸ்கே அணி டெலிட் செய்தது. இருப்பினும் நெட்டிசன்கள் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை பகிர துவங்கிவிட்டனர்.

- Advertisement -

சற்று முன்