டெல்லிக்கு எதிரான போட்டியின் போது சூப்பரான சாதனையை படைத்த சி.எஸ்.கே. இந்த சாதனை டீமையே சாரும்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 223 ரன்கள் சேர்த்து வலுவான ஒரு இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது. டெல்லி அணி இந்த இமாலய இலக்கை எட்டமுடியாமல் தடுமாறி தோற்றது

இந்த போட்டியில் பேட் செய்ய வந்த சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட்டும், டெவான் கான்வேயும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தனர். 79 ரன்கள் சேர்த்த ருத்துராஜ் கெய்க்வாட் சேட்டன் சக்காரியா பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அடுத்து சிறப்பாக விளையாடிய டெவான் கான்வேயும் சதத்தை 13 ரன்களில் மிஸ் செய்து 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷிவம் துபே மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் கடைசி நேரத்தில் சிறப்பான அதிரடி ஆட்டத்தைக் கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, 4 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஆனால் அவரின் பேட்டிங்கை பார்த்ததே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்து 200 ரன்களைக் கடந்த சிஎஸ்கே அணி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 22 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் அதிமுறை 200க்கும் மேற்பட்ட ரன்களைக்(முதலில் பேட்டிங் செய்து) குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. சிஎஸ்கே-வுக்கு அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 21 முறை, முதல் பேட்டிங்கில் 200+ ரன்களை சேர்த்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 13 முறை 200+ ஸ்கோர்களை சேர்த்துள்ளது.

- Advertisement -

நேற்றைய போட்டியைபொறுத்தவரை சென்னை அணியின் சிறப்பான ஆட்டம் காரணமாக பிளே-ஆப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது. அதே சமயம் ரன் ரேட் அடிப்படையில் சிறப்பான ஒரு இடத்தை பெற்றுள்ளது CSK. தற்போது சி.எஸ்.கே-வின் ரன் ரேட் +0.652 ஆக உள்ளது குறிப்பிட தக்கது.

இதையும் படிக்கலாமே: பதிரனாவுக்கு மலிங்கா எவ்வளவோ பரவா இல்ல. இவர் மிகவும் தந்திரமானவர் – பதிரனா குறித்து பேசிய பஞ்சாப் அணி வீரர்.

லக்னோ அணியும் நேற்றைய போட்டியில் KKRஐ வீழ்த்தி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் முதல் மூன்று இடங்கள் யார் என்ற விவரம் தற்போது உறுதி ஆகி உள்ளது. நான்காம் இடத்திற்காக RCB மற்றும் மும்பை அணி போட்டி போடுகிறது. அதுவும் இன்றைய போட்டிகளின் முடிவில் உறுதி ஆகி விடும்.

- Advertisement -

சற்று முன்