- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த 3 பேர் கண்டிப்பா சிஎஸ்கேல இருக்கமாட்டாங்க.. ரச்சின் ரவீந்திராவுக்கும் வாய்ப்பில்ல போல.. ரசிகர்கள் போட்ட...

இந்த 3 பேர் கண்டிப்பா சிஎஸ்கேல இருக்கமாட்டாங்க.. ரச்சின் ரவீந்திராவுக்கும் வாய்ப்பில்ல போல.. ரசிகர்கள் போட்ட லிஸ்ட்..

- Advertisement-

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஏறக்குறைய இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தை திறந்தாலே அது பற்றிய பேச்சு தான் பரவலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு ஐபிஎல் குறித்த செய்திகள் மிகப்பெரிய தாக்கத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் சூழலில் இது பரபரப்பாக பேசப்படுவதற்கு மற்ற சில முக்கிய காரணங்களும் உள்ளது.

மூன்று ஆண்டுகள் கழித்து ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் நிச்சயம் பல வீரர்கள் வெவ்வேறு அணிகளில் ஆடுவதற்கும் இன்னொரு பக்கம் சில வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்படுவதற்குமான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. தோனி, ரோஹித் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கான நிலை குறித்த பல்வேறு வதந்திகளும் இணையத்தில் வெளியாகி வருவதால் இதில் உறுதியான தகவல் என்ன என்பதை பற்றி எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

- Advertisements -

அது மட்டுமில்லாமல் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இறுதி முடிவை பிசிசிஐ செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் அதன் அடிப்படையில் பல அணிகளும் தேவைப்படும் வீரர்களை தக்க வைத்துக் கொண்டும் மற்றவர்களை விடுவிக்கும் பட்டியலையும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில் தான் சிஎஸ்கே அணி மெகா ஏலத்துக்கு முன்பாக இந்த மூன்று வீரர்களை நிச்சயம் விடுவிக்கலாம் என ரசிகர்களே ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். கடந்தாண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தவர் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா. பத்து போட்டிகளில் 578 ரன்கள் எடுத்திருந்த அவரை சென்னை அணி ஏலத்தில் சொந்தமாக்கி இருந்தது.

- Advertisement-

ஆனால் ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 222 ரன்கள் மட்டுமே எடுக்க, அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமலும் போனது. ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து வீரர் என்பதால் பிசிசிஐ இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறினால், நிச்சயம் பதிரானா மற்றும் தீக்ஷனா ஆகியோரை தான் சிஎஸ்கே அணி தொடர நினைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் RTM கார்ட் பயன்படுத்துலாம் என பிசிசிஐ அறிவித்தால் ஒருவேளை ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவவை சிஎஸ்கே சொந்தமாக்கலாம். இதேபோல கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கலக்கிய ரஹானேவால் இந்த முறை சிஎஸ்கே அணியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவருக்கு 36 வயதாவதால் இதற்கு பிறகும் ரஹானேவை தொடர்வதற்கான வாய்ப்பு சிஎஸ்கே அணியில் குறைவாக இருப்பதாகவே ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே ஆகியோரை தொடர்ந்து மூன்றாவதாக ஷர்துல் தாக்கூரை சிஎஸ்கே அணி விடுவிக்கும் என்றும் தெரிகிறது. ஒன்பது போட்டிகள் ஆடி ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எடுத்திருந்தார் ஷர்துல் தாக்கூர். .இதனால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனமும் உருவானது.

தனது திறனை நிரூபிக்க சிஎஸ்கே அணியில் வாய்ப்பு இருந்தும் அதனை செய்யத் தவறியதால் ஷர்துல் தாக்கூரை மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி விடுவிக்கும் என்றும் கருதப்படுகிறது.

சற்று முன்