- Advertisement 3-
Homeவிளையாட்டுதட்டு தடுமாறி வெற்றி பெற்ற சிஎஸ்கே.. ஆர்சிபி அணிக்கு எதிராக காத்திருக்கும் பெரிய சவால்..

தட்டு தடுமாறி வெற்றி பெற்ற சிஎஸ்கே.. ஆர்சிபி அணிக்கு எதிராக காத்திருக்கும் பெரிய சவால்..

- Advertisement 1-

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசிப் போட்டியில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு சூழலில் தான் தங்களின் 13 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டிருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்திருந்தது.

சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பலமாக இருந்து வந்த நிலையில் இந்த முறை அனைவருமே நன்றாக பந்துவீசி ராஜஸ்தானின் ரன் குவிப்பையும் கட்டுப்படுத்தி இருந்தனர். அந்த அணியின் அதிரடி தொடக்க ஜோடியான ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் முறையே 24 மற்றும் 21 ரன்களில் சென்னையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவுட் ஆகி இருந்தனர்.

சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் அவுட் ஆக ரியான் பராக் மற்றும் துருவி ஜுரேல் இணைந்து தான் ஓரளவுக்கு ரன் சேர்த்ததால் அவர்கள் 20 ஓவர்களில் 141 ரன்களை எடுக்க முடிந்தது. 35 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 47 ரன்களை எடுத்திருந்த ரியான் பராக் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மறுப்புறம் 18 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் சேர்த்திருந்த துருவ் ஜூரேல் அவுட்டான பின்னர் எந்த வீரர்களும் ரன் சேர்க்கவில்லை.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கேவும் ஆரம்பத்திலிருந்து அதிரடியாக ரன் சேர்த்ததால் அவர்களின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருந்தது. தொடக்க வீரர்களான ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் இரண்டு சிக்சர்களுடன் 27 ரன்கள் அடித்து அவுட்டாக ருத்துராஜ் மற்றும் மிச்சல் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

- Advertisement 2-

ஆனால், பின்னர் மிட்செல் மற்றும் மொயீன் அலி ஆகியோர் அவுட்டாக, வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தும் சிறிய தடுமாற்றத்தை கண்டது சிஎஸ்கே. இதற்கிடையே, 5 ஓவர்களில் 26 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், ஜடேஜாவும் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக, சிஎஸ்கே வெற்றி பெறுமா என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் உருவாக தொடங்கி விட்டது. அப்படி இருக்கையில், ருத்துராஜ் மற்றும் ரிஸ்வி நிதானமாக ஆட, கடைசி 3 ஓவர்களில் 13 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், 19 வது ஓவரில் போட்டியும் முடிவுக்கு வந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்