2010 ஐ.பி.எல் பைனல்ல தோனி எங்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் இது தான். இதெல்லாம் செஞ்சி தான் சி.எஸ்.கே அப்போ கப் அடிச்சது – ரகசியம் பகிர்ந்த பத்ரிநாத்

- Advertisement -

10வது முறையாக இன்று தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி ஐ.பி.எல் பைனலில் அடி எடுத்து வைக்கிறது. குஜராத் அணியை சி.எஸ்.கே எதிர்கொள்ளும் இந்த போட்டி நிச்சயம் இறுதி நிமிடம் வரை விறுவிறுப்பாகவே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பளே ஆப் சுற்றில் இரு அணிகளும் மோதி அதில் சென்னை வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

சென்னை அணி, முதன் முதலில் தங்களின் ஐ.பி.எல் வெற்றியை 2010 ஆம் ஆண்டே பதிவு செய்தது. அச்சமயம் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே தான் இறுதி போட்டி நடந்தது. அதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை குவித்தது. ஆனால் மும்பை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை மட்டுமே அப்போது குவிக்க முடிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தோனி அச்சமயம் தன்னுடைய அணி வீரர்களை என்னென்ன செய்ய சொன்னார். அந்த வெற்றி அச்சமயம் சாத்தியமானது எப்படி போன்ற பல தகவல்களை அந்த அணியில் அப்போது இருந்த வீரர்களில் ஒருவரான பத்ரிநாத் தற்போது கூறி உள்ளார். அவர் கூறியது பின் வருமாறு,

தோனி எங்களிடம், நம்முடைய ஸ்கோர் குறைவு அல்லது அதிகம் என்பதை பற்றி யாரும் யோசிக்க வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் தனி தனியாக பீலடிங் மூலம் ஒரு ரன்னை சேமிக்க முயற்சிப்போம். அப்படி நாம் செய்வதன் மூலம் நமது அணிக்காக 10 ரன்களை சேமித்திருப்போம். அது நிச்சயம் எதிரணிக்கு நமது ஸ்கோரை உயர்த்தி காட்டும்.

- Advertisement -

பீலடிங் முழுமையாக நமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஆகையால் நாம் அனைவரும் இணைந்து அதில் சிறப்பாக செயல்பட்டால் எதிரணிக்கு அது இலக்கை பெரியதாக காட்டும். அதே சமயம் எல்லோரும் என்னை கவனித்துக்கொண்டே இருங்கள். ஏன் என்றால் கடைசி நேரத்தில் நான் பீல்டிங்கில் செய்யும் சில மாறுதகள் சில கேட்ச்களை பிடிக்க உதவும் என்று தோனி எங்களிடம் அப்போது கூறினார்.

அவர் கூறியது போலவே பல முறை நடந்தது. எங்களை பொறுத்தவரை அப்போது ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு தான். நாங்கள் அதை முடித்துவிட்டு அடுத்த பந்திற்கு சென்றோம். ஒவ்வொரு பந்திற்கும் பீல்டிங் சரியாக இருக்கிறதா என்பதை அவர் கவனிப்பார். அதே சமயம் பௌலர் சரியாக பந்து வீசுகிறாரா என்பதையும் கவனிப்பார். இப்படி எல்லாம் சிறப்பாக செயல்பட்டு தான் 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை தோனி பெற்று தந்தார் என கூறி உள்ளார் பத்ரிநாத்.

- Advertisement -

சற்று முன்