- Advertisement -
Homeவிளையாட்டுரச்சின் ரவீந்திராவ சிஎஸ்கே எடுக்க மாட்டாங்க.. அதை விட பெருசா தோனி போடுற மாஸ்டர் பிளான்...

ரச்சின் ரவீந்திராவ சிஎஸ்கே எடுக்க மாட்டாங்க.. அதை விட பெருசா தோனி போடுற மாஸ்டர் பிளான் இது தான்..

- Advertisement-

17 வது ஐபிஎல் தொடரின் ஏலம் நாளை (19.12.2023) நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிரமாக திட்டம் போட்டு நிச்சயம் தயாராகி வருவார்கள் என்றே.தெரிகிறது. இன்னொரு பக்கம், ஐபிஎல் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த ஏலத்தை எதிர்நோக்கி வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவில் வைத்து நடந்த உலக கோப்பைத் தொடரில் பல வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

அவர்களில் பலரும் இந்த ஏலத்தின் இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இதனால், அந்த வீரர்களை எந்த அணி ஏலத்தில் எடுத்துக் கொள்ளும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஐபிஎல் ஏலத்தில் எப்போதுமே வித்தியாசமான யுக்தியை கையாளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம் எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

- Advertisement -

இதற்கு காரணம், மற்ற அணி வீரர்கள் இளம் துடிப்புடன் ஆடும் வீரர்களை அணியில் சேர்த்து வெற்றி பெற எண்ணும் நிலையில், சிஎஸ்கே அணி அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களை குறி வைத்து அவர்களைக் கொண்டு வெற்றிகளை குவிக்கவும் செய்வார்கள். ‘டாடி’ அணி என சமீப காலமாக சிஎஸ்கேவை ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் சூழலில், நடப்பு சாம்பியனாகவும் அவர்கள் திகழ்ந்து வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் என நிச்சயம் அந்த அணியின் கேப்டன் தோனியை சொல்லலாம்.

எந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் என்பது உள்ளிட்ட சிஎஸ்கே அணியின் முக்கிய மேம்பாடுகளில் அவரது முடிவும் முக்கியமானதாக உள்ளது. அப்படி இருக்கையில், ரச்சின் ரவீந்திரா, ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ஹசரங்கா உள்ளிட்ட பல திறம் வாய்ந்த வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். இதில், யாரையாவது சிஎஸ்கே அணி எடுக்க முயலுமா என்பதும் அதிகம் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement-

இதனிடையே, ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி இந்த நட்சத்திர வீரரை எடுக்காது என முன்னாள் இந்திய வீரர் மற்றும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். “சிஎஸ்கே அணி தங்களின் தொடக்க பேட்டிங் இணையை நிச்சயம் மாற்ற பார்க்காது. அதே போல, மிடில் ஆர்டரில் ஐபிஎல் போன்ற தொடரில் ஆடுவது ரச்சின் ரவீந்திராவுக்கு கடினமாக இருக்கும். அவர் முதல் மூன்று வீரரின் ஒருவராக களமிறங்க வேண்டும்.

அதனால், ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயலாது என நான் நினைக்கிறேன். அவர்கள் வெளிநாட்டு வீரர்களை மிடில் ஆர்டருக்கான இடத்தில் எடுக்கப் பார்ப்பார்கள். அதே வேளையில், ரச்சின் ரவீந்திராவை ஆர்சிபி அணி எடுக்க முயற்சிக்கலாம். பாப் டு பிளெஸ்ஸிஸ் 3 வது வீரராக ஆடினால், கோலி மற்றும் ரவீந்திரா தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்” என சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்