- Advertisement -
Homeவிளையாட்டுCSK vs GT : முதல் முறையாக இருந்தாலும் குஜராத் அணிக்கு பாடம் புகட்டும் வகையில்...

CSK vs GT : முதல் முறையாக இருந்தாலும் குஜராத் அணிக்கு பாடம் புகட்டும் வகையில் வாஷ் அவுட் செய்து வெற்றியுடன் பைனலுக்கு முன்னேறிய சி.எஸ்.கே

- Advertisement-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டியில் அடி எடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா தங்களது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. பின்னர் சென்னை அணி சார்பாக துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டேவான் கான்வே 40 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்யாகி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகளில் குஜராத் அணியே சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

இவ்வேளையில் தற்போது முதல் முறையாக குஜராத் அணியை வீழ்த்தியதோடு மட்டுமின்றி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று அனைவராலும் பேசப்பட்டு வரும் வேளையில் நிச்சயம் சென்னை அணி கோப்பையுடன் அவரை வழி அனுப்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

கடந்த ஆண்டு முதன் முறையாக ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி இதுவரை சேசிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வந்தது. ஆனால் முக்கியமான சமயத்தில் அவர்களை கட்டுப்படுத்தி சி.எஸ்.கே அணி எப்பேர்ப்பட்ட அணி என்பதை அவர்களுக்கு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்