2011 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்திய அணி 50 அவர் உலகக் கோப்பை வென்றது போல வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பையிலும் இந்தியா வெல்ல வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எண்ணமாகும். இதில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என அனைவரும் சரியான விகிதத்தில் பங்காற்ற வேண்டும்.
இதில் இந்தியா மட்டுமில்லாமல் உலகமே ஒரு வீரரின் ஆட்டத்தை பார்க்க உற்று நோக்கி காத்திருக்கிறது. அவர் தான் ரன்களை சேஸ் செய்வதில் வல்லவரான கிங் கோலி. விராட் கோலி அசாதாரணமான சூழலிலும் அற்புதமாக ஆடி அணியை மீட்டெடுப்பதில் வல்லவர். 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை அவருக்கு நன்றாகவே அமைந்தது. எனவே வரவிருக்கும் உலகக்கோப்பையும் அவர் அதிக ரன்களை குறித்து தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில காலமாகவே பாம் அவுட்டில் இருந்த விராத் கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அரை சதம் போன்றவற்றை அடித்து மீண்டும் தனது பழைய பார்மிற்கு வந்துள்ளார். அதன்பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. நல்ல ஓய்வெடுத்த வீராத் கோலி மீண்டும் புதிய உத்வேகத்துடன் ஆசிய கோப்பை அணிக்காக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி, விராட் கோலி மற்றும் பாபர் அசாமை ஒப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். வரவிருக்கும் ஆசிய கோப்பையில் பாபர் அசாம் சிறப்பாக செயல்படுவார், விராட் கோலியை விடவும் அவர் அதிக ரன்களை எடுக்கக்கூடம் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது மறுப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் நட்சத்திர வீரர் அம்புரோஸ் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்: விராட் கோலி மிகவும் சிறப்பான தரமான ஆட்டக்காரர் ஆவார். அவர் கடந்தாண்டு ஆசியக் கோப்பையில் சதம் அடித்ததன் மூலம் அவர் தனது நீண்ட கால செஞ்சுரி பஞ்சத்தை உடைத்தெறிந்தார். உலகில் உள்ள எல்லா வீரருக்குமே ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரியான சூழல் ஏற்படும் . அது வீராட் கோலிக்கும் ஏற்பட்டது. ஆனால் அதை அவர் கடந்து வந்துள்ளார். மேலும் சில வருடங்கள் அவர் இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
70 சதம் அடித்திருந்த விராத் கோலி தனது 71 வது சதத்தை மூன்று வருடங்களாக அடிக்க முடியாமல் இருந்தது. தனது 71 வது சதத்தை வீராட் கோலி கடந்த வருட ஆசிய கோப்பையில் பூர்த்தி செய்தார். அதில் அவர் ஐந்து இன்னிங்ஸில் 276 ரன்கள் குவித்து 147.59 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார். அதில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதமும் அடங்கும். அந்தத் தொடரில் அவர்தான் அதிகபட்ச ரன் எடுத்த வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.