ஐபிஎல் 16 சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. பாதி போட்டிகளுக்கு மேல் நடந்து முடிந்துள்ள நிலையில் எந்தந்த அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 44 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
டெல்லி அணி முதல் ஓவரிலேயே பில் சால்ட் விக்கெட்டை முதல் பந்திலேயே இழந்தது. இதையடுத்து சீரான இடைவெளிகளில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருக்க, இன்னிங்ஸின் எந்த ஒரு கட்டத்திலும் டெல்லி பேட்ஸ்மேன்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. குஜராத் அணி பவுலர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணியிலும் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நிலைத்து நின்று ஆடினார். இதனால் எப்படியும் குஜராத் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால் ரன் ரேட் ஏறிக்கொண்டே சென்றது.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் திவாட்டியா மற்றும் ஹர்திக் பாண்ட்யா என்ற இரண்டு ஹிட்டர்கள் இருந்தும் சிறப்பாக பந்து வீசி 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி பெறவைத்தார் இஷாந்த் சர்மா. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார்.
Deception at its best! 👊🏻
What a ball that from @ImIshant 🔥🔥#GT have lost four wickets now and this is turning out to be a tricky chase!
Follow the match ▶️ https://t.co/VQGP7wSZAj #TATAIPL | #GTvDC pic.twitter.com/j7IlC7vf0X
— IndianPremierLeague (@IPL) May 2, 2023
முன்னதாக இந்த போட்டியில் குஜராத் வீரர் விஜய் சங்கரின் விக்கெட்டை நக்கிள் பால் மூலமாக அபாரமாகக் கைப்பற்றினார் இஷாந்த். இந்த பந்து பேட்ஸ்மேனை திக்கித்து சில வினாடிகள் என்ன நடந்தது என்பதையே தெரியாத அளவுக்கு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இஷாந்த் சர்மாவின் இந்த பந்தை வேகப்பந்து ஜாம்பவான் டேல் ஸ்டெயின் “தலை சிறந்த நக்கிள் பால்” புகழ்ந்து பாராட்டியுள்ளார்.