- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் தோனி பேட்டிங்க பாக்கணும், யாராவது ஒருத்தர் அவுட் ஆகுங்கனு ரசிகர்கள் மட்டும் இல்ல கிரிக்கெட்...

நான் தோனி பேட்டிங்க பாக்கணும், யாராவது ஒருத்தர் அவுட் ஆகுங்கனு ரசிகர்கள் மட்டும் இல்ல கிரிக்கெட் வீரரும் ஆசை படறாங்க போல – வைரலாகும் பிரபல வீரரின் ட்வீட்

- Advertisement 1-

2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார் தோனி. ஒரே அணிக்காக 200 போட்டிகளுக்கு மேல் அவர் கேப்டனாக இருந்து சாதனைப் படைத்துள்ளார். தற்போது 41 வயதாகும் தோனி, ஐபிஎல் விளையாடும் வீரர்களில் அதிக வயதுடைய வீரராக இருந்து வருகிறார்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த சீசனோடு அவர் ஓய்வை அறிவிப்பார் என கருத்துகள் எழுந்துள்ளன. என்னதான் தோனிக்கு வயதானாலும் அவர் ஓய்வை அறிவிப்பதை ரசிகர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வரவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த சீசன் முழுவதும் தோனி, முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் பேட்டிங்கில் கூட 8 ஆவது பேட்ஸ்மேனாக இறங்குகிறார். சில போட்டிகளுக்கு முன்பு அவரே “என்னால் என்ன முடியுமோ அதை செய்கிறேன். என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள்” என அணியினரிடம் வேண்டுகோளாக வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல் பேசிய ஹர்பஜன் சிங் பின்வருமாறு கூறினார். போட்டி முடிந்ததும் அவர் காலில் மருத்துவ உபகரணங்களை அணிந்துகொண்டுதான் நடக்கிறார்.

ஆனாலும் இதெல்லாம் ரசிகர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுக்கு தேவையெல்லாம், தோனி ஒரு பந்தாவது பேட் செய்யவேண்டும் என்பதுதான். அதனால்தான் சென்னை அணி பேட் செய்யும் போது இறுதி ஓவர்கள் நெருங்கும் போது ஜடேஜா அவுட் ஆக வேண்டும் எனவும் கத்த ஆரம்பித்துள்ளனர். இதை ஜடேஜாவே ஜாலியாக எடுத்துக்கொண்டுள்ளார்.

- Advertisement 2-

இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களின் இந்த மனநிலையோடே இருக்கின்றனர். நேற்று முன் தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜா பேட் செய்து கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா முன்னாள் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “தோனி பேட் செய்ய வரட்டும்” என ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 20 ஆவது ஓவரின் இறுதியில் ஜடேஜா அவுட் ஆக, களமிறங்கிய தோனி 3 பந்துகளை சந்தித்து 2 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்