- Advertisement -
Homeவிளையாட்டுகோலியோட விக்கெட் விழுந்ததுமே கணிச்சிட்டேன்... இப்படி மாறும்னு நானே எதிர்பாக்கல... வலைப்பயிற்சியில பாத்திருக்கன்... தோல்விக்கு பின்...

கோலியோட விக்கெட் விழுந்ததுமே கணிச்சிட்டேன்… இப்படி மாறும்னு நானே எதிர்பாக்கல… வலைப்பயிற்சியில பாத்திருக்கன்… தோல்விக்கு பின் தஷன் சனக்கா பேட்டி

- Advertisement-

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி மகத்தான வெற்றியை பெற்று இலங்கை அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த போட்டியில் பலரும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும், இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான துனித் வெல்லாலகே பேசுபொருளாக மாறி உள்ளார்.

அவர் இந்திய அணிக்கு எதிராக வீசிய பந்துகள் ஆகட்டும், எடுத்த விக்கட்டுகள் ஆகட்டும், அவர் பேட்டிங் செய்த விதமாகட்டும் அனைத்துமே பலரையும் வியக்க வைக்கும் வண்ணம் இருந்தது. எனும் இந்த போட்டியில் இலங்கை அணி இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியை பொறுத்தவரை 40.1 ஒரு ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் அடித்தது.

- Advertisement -

இலங்கை அணி 41.3 ஓவர்லேயே அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்த வரை குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ராவும் ரவீந்திர ஜடேஜாவும் தலா இரண்டு விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா தலா ஒருவிக்கட்டும் விழித்தனர். இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை அணையின் கேப்டன் தசுன் சானக்க கூறுகையில்,

நாங்கள் இதை பேட்டிங் ட்ராக் என்று எண்ணி தான் களம் இறங்கினோம் ஆனால் இந்த மாதிரி விக்கெட் விழுந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. வெல்லலாகே, தனஞ்செயா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சிறப்பாக வீழ்த்தினார்.. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களான தனஞ்செயா மற்றும் சதீரா ஏற்கனவே வலை பயிற்சியில் பவுலிங் செய்த போது அவர்களின் திறமையை நான் பார்த்துள்ளேன். அவர்களை நான் இன்று பயன்படுத்தினேன் அவர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள்..

- Advertisement-

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் பொது வெல்லலாகே மிக சிறப்பாக செயல்பட்டார். நிச்சயம் அவர் இந்த போட்டியில் ஏதவது ஸ்பெஷலாக செய்வார் என்று எதிர்பார்த்தேன். அதே போல அவரும் செய்துவிட்டார். அவர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய உடனே இன்று அவருடைய நாள் என்பதை நான் கணித்தேன் என்று அவர் கூறினார்.

இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம், புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்திய அணி நீடித்து வருகிறது. அதே சமயம் பைனலுக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. அடுத்து இலங்கை அணி பாக்கிஸ்தான் அணியோடு மோத உள்ளது. அந்த போட்டியின் முடிவை பொறுத்தே யார் இந்திய அணியோடு பைனலில் மோதப்போகிறார்கள் என்பது தெரியவரும்.

சற்று முன்