- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா கூட எல்லாம் மேட்ச் ஆடாதீங்க.. அவங்க செஞ்சது மோசம்.. இங்கிலாந்து அணியை எச்சரித்த முன்னாள்...

இந்தியா கூட எல்லாம் மேட்ச் ஆடாதீங்க.. அவங்க செஞ்சது மோசம்.. இங்கிலாந்து அணியை எச்சரித்த முன்னாள் வீரர்!..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் அதே வேளையில் மற்றொரு பிரச்சனையும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை உண்டு பண்ணி உள்ளது. கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்து சேர்ந்து பயிற்சிகளை ஆரம்பித்து விட்ட நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஒருவர் மட்டும் வர முடியாமல் போயுள்ளது.

துபாயில் பயிற்சி முகாமில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் இந்தியாவிற்கு திரும்பி இருந்த நிலையில் முஸ்லீம் வீரர் ஷோயப் பஷீர், விசா அனுமதி கிடைக்காததன் காரணமாக துபாயில் மாட்டி விட்டார் என தெரிகிறது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரால் முதல் போட்டிக்கு முன்பாகவே இணைய முடியாததால் இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்கள் மற்றும் பல கிரிக்கெட் பிரபலங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முஸ்லீம் என்பதால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் சார்பில் வேண்டுமென்றே விசாவை மறுத்து பெரிய பிரச்சனையாக உருவாக்கி உள்ளதாகவும் பல்வேறு கருத்துக்களை பலரும் முன் வைத்து வருகின்றனர்.

இது பற்றி இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட பலரும் கூட தங்களின் நிலைப்பாட்டை கருத்துக்களாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர். இதற்கு மத்தியில் 20 வயதே ஆகும் இளம் வீரர் சோயப் பஷீர் இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவிற்கு வந்தடைந்து விடுவார் என்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் இங்கிலாந்து அணிக்காக களமிறங்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றது.

- Advertisement 2-

இந்த நிலையில் இந்தியாவில் நடந்துள்ள இந்த சம்பவம் பற்றி கடும் கோபத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டு. “இரண்டு முடிவுகளில் ஒன்றை தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும். ஒன்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை புறக்கணித்து விட்டு நாடு திரும்ப வேண்டும். இல்லை என்றால் இளம் வீரர் ஷோயப் பஷீர் இந்தியாவிற்கு வரும் வரை டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும்.

இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு வரும் பொழுது இது போன்று தடுத்ததாக சம்பவங்கள் எதுவுமே கிடையாது. பாகிஸ்தான் பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்பதை தவிர தற்போது இங்கிலாந்தில் இருக்கும் பஷீரை ஏன் வர முடியாமல் தடுக்குறீர்கள். கடந்த ஆண்டும் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 36 மணி நேரம் தாமதமாக தான் தனது அணியினருடன் இணைந்திருந்தார்.

இதனால் பஷீருடன் துணை நின்று அவருக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பே விசா குறித்த வேலைகளை முடித்து தயாராகி இருக்க வேண்டும்” என டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.

சற்று முன்