- Advertisement 3-
Homeவிளையாட்டுரைட் ஹேண்டர் போல துல்லிய வார்னர்... சூழல் பால் போட்டு சுருட்டிய அஷ்வின்... தரமான சம்பவம்

ரைட் ஹேண்டர் போல துல்லிய வார்னர்… சூழல் பால் போட்டு சுருட்டிய அஷ்வின்… தரமான சம்பவம்

- Advertisement-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 105, சுப்மன் கில் 104 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள், கேஎல் ராகுல் 59 ரன்கள் சேர்த்ததால் 50 ஓவர்களில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 400 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்க்கமே அதிர்ச்சியாக அமைந்ததுய். பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் ஷார்ட் 9 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். இதன்பின் டேவிட் வார்னர் – லபுஷேன் கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கியது.

- Advertisements -

9வது ஓவரின் போது மழை குறுக்கிட ஆஸ்திரேலிய அணிக்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் வார்னர் – லபுஷேன் கூட்டணி அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் டேவிட் வார்னருக்கு அஸ்வினை எதிர்கொள்வதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதனால் அஸ்வினை எதிர்கொள்ள டேவிட் வார்னர் புதிய திட்டத்தை கையில் எடுத்தார்.

இடதுகை பேட்ஸ்மேனான வார்னர், வலது பேட்னாக மாறி அஸ்வினை எதிர்கொண்டார். அப்போது அஸ்வினின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி வேற டேவிட் வார்னர் அடிக்க, ஆட்டம் விறுவிறுப்பானது. ஆனால் அடுத்த ஓவரிலேயே அஸ்வின் பந்தில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் அந்த விக்கெட்டை மீண்டும் சோதனை செய்த போது வார்னரே அதிர்ச்சியடைந்தார்.

- Advertisement-

ஏனென்றால் அஸ்வின் வீசிய பந்தை டேவிட் வார்னர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற போது, அவரின் பேட்டில் பந்து பந்து காலில் பட்டு சென்றது. ஆனால் அதனை அப்பீல் செய்யாமல் விக்கெட் என்று நம்பி டேவிட் வார்னர் நடையை கட்டினார். இதற்கு டேவிட் வார்னரின் வலது கை பேட்டிங்கே காரணமாக அமைந்தது.

வழக்கமாக இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் அஸ்வின், டேவிட் வார்னரை சொல்லி வைத்தாற் போல் ஏராளமான முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாகவே அஸ்வினை எதிர்கொள்ள வார்னர் வேறு திட்டத்தோடு களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்