டேவிட் வார்னரா இது.. மிரட்டல் சாதனையா இருக்கே.. சச்சின் டெண்டுல்கர் ரெக்கார்ட் முறியடிப்பு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. நீண்ட ஓய்வுக்கு பின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் தொடக்கம் கொடுத்தார்.

தொடக்கம் முதலே நிதானம் காட்டிய டேவிட் வார்னர், அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட்டிற்கு கம்பெனி கொடுத்தார். ஆனால் அரைசதம் அடித்து ஹெட் ஆட்டமிழந்த பின், ஆட்டத்தின் கட்டுப்பாடு வார்னரிடம் வந்தது. சிறப்பாக ஆடிய வார்னர் 52 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் டேவிட் வார்னரின் அதிரடி உச்சத்திற்கு சென்றது.

- Advertisement -

இதன் காரணமாக 52 பந்துகளில் அரைசதம் அடித்த அரைசதம், அடுத்த 33 பந்துகளில் சதத்தை எட்டினார் அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் அடிக்கும் 46வது சதம் இதுவாகும். ஒருநாள் கிரிக்கெட்டில் 20வது சதத்தை பூர்த்தி செய்த டேவிட் வார்னர், 93 பந்துகளில் 12 பவுண்டர், 3 சிக்சர் உட்பட 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

டேவிட் வார்னர் விளாசிய சதத்தின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரராக மட்டும் 45 சதங்களை விளாசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அல்லாமல் 4வது இடத்தில் ஆடியதால் சச்சின் சதம் குறைவாக உள்ளது.

- Advertisement -

ஆனால் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25, ஒருநாள் கிரிக்கெட்டில் 20 மற்றும் டி20 கிரிக்கெட்டில் 1 என்று அனைத்துமே தொடக்க வீரராக களமிறங்கி விளாசியது தான். சச்சின் சாதனையை முறியடித்ததன் மூலம் டேவிட் வார்னரை பலரும் பாராட்டி வருகின்றனர். டேவிட் வார்னரின் அதிரடி காரணமாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் சேர்த்தது.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 41.5 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா அணி சிறப்பாக தயாராகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்