தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை விளையாடி வருகிறது. அதில் தற்போது வரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சொற்பனங்களில் வெளியேறி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரரான குயின்டன் டி காக் 77 பந்துகளின் 82 ரன்கள் அடித்தார். இதில் பத்து பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம்.
அதேபோல் டெம்பா பவுமா 57 ரன்கள் எடுத்தார். ஐடன் மார்க்ராம் மிகவும் சிறப்பாக ஆடி 102 ரன்கள் விலாசினர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 338 ரன்கள் அடித்து மிகப்பெரிய ஒரு இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.
இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி நிச்சயம் துரத்தும் என்று எதிர்பார்த்த அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னரை தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. டேவிட் வார்னர் 56 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டர்களும் மூன்று சிக்ஸர்களும் அடக்கம். அவரது ஸ்ட்ரைக் ரேட் 139.29 ஆக இருந்தது.
அவருக்கு அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட் 38 ரன்கள் அடித்தார். மிச்சல் மார்ச் 29 ரன்களும் வெளியேற, மார்னஸ் லாபுசாக்னே 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இபப்டி எடுக்க அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்பனங்களிலேயே வெளியேறினர். இதன் காரணமாக 34.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பாக ரன்களை குவித்து வந்த டேவிட் வார்னர், தேவை இல்லாமல் ரன் அவுட் ஆனார். அதற்க்கு காரணம் அவரது ஷூ தான். அவன் எதிர்கொண்ட ஒரு பந்தை தட்டி ரன் ஓட முயன்றபோது அவரது ஷூ காலில் இருந்து கழண்டு வர அவர் தடுமாறி விழுந்தார். ஆனாலும் மீண்டும் எழுந்து அவர் ஓடிய போதிலும் சரியான நேரத்தில் கிரீஸை அடையாததால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.