- Advertisement -
Homeவிளையாட்டுஅடுத்த போட்டி சொந்த மண்ணில், வெற்றி எங்களுக்கு தான் - சி.எஸ்.கேவிற்கு பயம் காட்டும்...

அடுத்த போட்டி சொந்த மண்ணில், வெற்றி எங்களுக்கு தான் – சி.எஸ்.கேவிற்கு பயம் காட்டும் வார்னர் பேச்சு

- Advertisement-

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. டெல்லி அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டதால் இந்த வெற்றி அவர்களுக்கு பெரிதாக பயனளிக்காது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி சில போட்டிகளுக்கு பிறகு பிருத்வி ஷாவை அணிக்குள் கொண்டு வந்தது. டேவிட் வார்னரோடு களமிறங்கிய அவர் இந்த முறை தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அரைசதம் அடித்துக் கலக்கினார். அந்த அணியின் ரைலே ரூஸோ அதிரடியாக விளையாடி, 37 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 213 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதர்வா டைடி மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தாலும், மற்ற வீரர்களிடம் இருந்து பெரிதாக ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் “மிகவும் மோசமாக பீல்டிங் செய்தோம். ஆனால்  நாங்கள் எங்கள் பலத்தை அறிந்துகொண்டோம். நல்ல விக்கெட்டில் பேட்டிங் செய்தது மிகப்பெரிய ஸ்கோருக்கு உதவியது. சில போட்டிகள் எங்கள் சொந்த மைதானத்தில் மிகவும் சவாலாக அமைந்தன. தொடக்க வீரராக பிருத்வி ஏற்படுத்திய தாக்கம் பார்க்க நன்றாக இருந்தது.

- Advertisement-

ரைலே ரோசோவும் சிறப்பாக விளையாடினார். எங்கள் சொந்த மைதானத்தில் இது போல தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டியுள்ளது . இன்றைய போட்டியில் 2 புள்ளிகளைப் பெற்றது சந்தோஷம். எங்கள் மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியையும் வெற்றியோடு முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: பஞ்சாப் அணியின் தோல்வியினால் பெங்களூரு அணிக்கு ஏற்பட்டுள்ள பிரகாசமான வாய்ப்பு

டெல்லி அணியின் அடுத்த போட்டி அவர்களின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக என்பதால் அவர்களுக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கலாம். சிஎஸ்கே அணி அந்த போட்டியை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற சூழலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்