- Advertisement -
Homeவிளையாட்டுதலைவர், லெஜெண்ட், கடவுள் - தல தோனி பற்றி டெல்லி அணி வீரர்கள் ஒற்றை வார்த்தையில்...

தலைவர், லெஜெண்ட், கடவுள் – தல தோனி பற்றி டெல்லி அணி வீரர்கள் ஒற்றை வார்த்தையில் புகழாரம்

- Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற அனைத்து சீசன்களை காட்டிலும் இந்த தொடரானது மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏனெனில் தற்போது பிளே ஆப் சுற்றினை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அனைத்து அணிகளுக்குமே பிளே சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதால் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் காணப்படுகிறது.

அதோடு எந்த ஒரு அணியும் இனிவரும் போட்டிகளில் அடுத்தடுத்து சில போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட புள்ளி பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும். எனவே இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்று குறித்த உறுதியான தகவலும் கிடைக்கும் என்பதனால் இந்த தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதில் அளிக்குமாறு டெல்லி அணியின் நிர்வாகம் அந்த அணியைச் சேர்ந்த வீரர்களிடம் ஒரு கேள்வி எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த டெல்லி அணியின் வீரர்கள் ஒரே வார்த்தையில் தோனி குறித்த பதிலையும் அளித்திருந்தனர். அந்த பதிவு தற்போது வீடியோவாகவும் அந்த அணியின் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement-

அந்த வகையில் டெல்லி அணியின் வீரர்கள் கூறியதாவது : இஷாந்த் சர்மா – பிக் பிரதர், அக்சர் பட்டேல் – மிஸ்டர் கூல், மிட்சல் மார்ஷ் – லெஜன்ட், ரிப்பல் பட்டேல் – லெஜன்ட், யாஷ் துள் – கேப்டன், சேத்தன் சக்காரியா – தலைவா, கலீல் அகமது – லெஜெண்ட், சர்பாஸ் கான் – பிக் பேன், முகேஷ் குமார் – நோ வேர்ட்ஸ் என தோனி குறித்த இவர்கள் ஒற்றை வரியில் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்