- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கேல இருந்து மும்பை போனது.. ஒருவிதத்துல சந்தோசம் தான்.. தீபக் சாகர் சொன்ன காரணம்..

சிஎஸ்கேல இருந்து மும்பை போனது.. ஒருவிதத்துல சந்தோசம் தான்.. தீபக் சாகர் சொன்ன காரணம்..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் தேர்வான பல இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் என அனைவருமே தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் நெருப்பு போல ஆடி வருகின்றனர். சர்வதேச போட்டிகளுக்கு நிகராக ஒவ்வொரு போட்டிகளும் அமைந்து வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா, உர்வி படேல், ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர் என பல வீரர்களின் ஆட்டமும் அதிக கவனத்தை பெற்று வருகிறது.

இதனால் ஐபிஎல் தொடரும் இதே போல நெருப்பாக இருக்கும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எதிர்பாராத நிறைய திருப்பங்கள் பலவும் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரையிலும் அரங்கேறி இருந்தது. அந்த வகையில், சிஎஸ்கே அணிக்காக கடந்த 6 ஐபிஎல் சீசன்களுக்கு மேல் ஆடிவந்த தீபக் சாகர், நடந்து முடிந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருந்தார்.

பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக பந்து வீச்சில் திகழ்ந்த தீபக் சாகர், தற்போது விலகி உள்ளது நிச்சயம் அவர்களுக்கு மிகப்பெரிய அடி தான். அப்படி ஒரு சூழலில் மும்பை அணியில் இணைந்தது பற்றி தீபக் சாகர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “நானும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவதற்கு மிக ஆர்வமாக உள்ளேன். சில விஷயங்கள் நாம் எதிர்பார்த்தது போல அமையாது.

எனது கவனம் அனைத்தும் முதல் தர கிரிக்கெட்டில் ஆடி ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். மும்பை அணி அதற்கான சிறந்த இடம் என்பதுடன் வான்கடே மைதானமும் ஸ்விங் மற்றும் வேகத்தின் அடிப்படையில் எனது பந்து வீச்சிற்கு பொருத்தமான இடமாகும். என்னை பொருத்தவரையில் இந்த ஏலம் என்பது பணத்தை பற்றியது கிடையாது.

- Advertisement-

இந்திய அணியில் நான் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கு உதவி செய்வதற்கான சரியான அணியாக இருக்க வேண்டும். தற்போது 32 வயதாகும் நிலையில் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் எனது கிரிக்கெட் பயணத்தில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

இதனால் எந்த அணி அதிக வாய்ப்புகளை தருமோ அங்கே இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஒரு மிகப்பெரிய அணியில் இருந்து அதுக்கு நிகராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தது மகிழ்ச்சி தான். ஏலத்தை பார்த்தபோது எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் தான் கவனம் செலுத்தினேன். அல்லது பணத்தின் மீது அல்ல” என தீபக் சாகர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்