Homeகிரிக்கெட்உங்கள் பேவரைட் கேப்டன் யார்? ராஜஸ்தான் மக்களுக்கு முன்பு நின்று கேள்விகளை முன்வைத்த தீபக் சஹார்....

உங்கள் பேவரைட் கேப்டன் யார்? ராஜஸ்தான் மக்களுக்கு முன்பு நின்று கேள்விகளை முன்வைத்த தீபக் சஹார். காதை கிழிக்கும் அளவிற்கு சத்தமிட்டு சும்மா அதிரவிட்ட ரசிகர்கள்

-Advertisement-

ஐபிஎல் கிரிக்கெட் 16 ஆவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. வெற்றி பெற்றதும் தோனி ஜடேஜாவை கட்டியணைத்து உணர்ச்சியை காட்டியது கூஸ்பம்ப் தருணமாக அமைந்தது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எப்போதுமே, தமிழ்நாடு தாண்டியும் இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் அணிகளில் ஒன்று. அதுவும் இந்த சீசனில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு காரணமாக ஆதரவு பல மடங்கு கூடியது.

-Advertisement-

அதனால் அந்த அணிக்கு மைதானத்திலும், சமூகவலைதளங்களிலும் கூடுதல் ஆதரவு கிடைத்து வருகிறது. இப்படியான சூழலில் இந்த குறிப்பிட்ட சீசனில் சி.எஸ்.கே-வின் வெற்றி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 41 வயதாகும் தோனி ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணியை 14 சீசன்கள் வழிநடத்தியுள்ளார்.

இதில் 10 முறை அணியை பைனலுக்கு அழைத்துச் சென்று 5 முறை கோப்பையை வென்றுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் (தலா 5 முறை) பகிர்ந்துள்ளன.

-Advertisement-

இந்நிலையில் இப்போது தீபக் சஹார் இடம்பெறும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக் சஹார் சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களாக விளையாடி வருகிறார்.

இதையும் படிக்கலாமே: அவ்ளோ தான் சோலி முடிஞ்சுது. இனிமே இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு இல்ல. ஓவர் காண்பிடண்ட்டில் பேசும் ரிக்கி பாண்டிங். பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

அந்த வீடியோவில் ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பெருங்கூட்டத்துக்கு நடுவே நிற்கும் சஹார் ரசிகர்களிடம் “உங்களுக்கு பிடித்த அணி எது?” எனக் கேட்க ரசிகர்கள் “சிஎஸ்கே… சிஎஸ்கே” எனக் கத்துகின்றனர். அடுத்து “உங்களுக்கு பிடித்த பவுலர் யார்?” எனக் கேட்க “தீபக் சஹார்” என கத்துகின்றனர். அடுத்ததாக “உங்களுடைய பேவரைட் கேப்டன் யார்” எனக் கேட்க “தோனி… தோனி… தோனி..” எனக் காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தம் போட்டு கோஷமெழுப்பியுள்ளனர். இந்த வீடியோ சென்னை அணியின் ரசிகர் கூட்டத்தை அறிந்துகொள்ள ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

-Advertisement-

சற்று முன்