பைனல் முடிஞ்சி தான் என்னோட ஆளுக்கு நான் ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருந்தன். ஆனா தோனி சொன்னதால முன்னாடியே பண்ணிட்டன். தீபக் சஹார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

- Advertisement -

ஐபிஎல் 2023 பொருத்தவரை சிஎஸ்கே அணியின் மிகச்சிறந்த ஒரு பவுலராக தீபக் சஹார் இருந்து வருகிறார். இந்த சீசனில் அவர் சில போட்டிகளை தவறவிட்டிருந்தாலும் சிறப்பான ஒரு கம்பாக்கை கொடுத்துள்ளார். அவர் இதுவரை ஒன்பது போட்டிகளில் பங்கேற்று சிஎஸ்கே விற்காக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எக்கானமி ரேட் 8.63றாக உள்ளது.

குஜராத்திற்கு எதிரான குவாலிஃபயர் போட்டியில் அவர் மிக முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியை பொறுத்தவரை அவர் 29 ரன்களை கொடுத்திருந்தார். அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு தேர்வானது.

- Advertisement -

இந்த நிலையில் தீபக் சஹார் தனது வாழ்வில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வு குறித்து தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் தனது காதலியான ஜெயா பரத்வாஜிடம் ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார். அந்த செய்தியானது அப்போதே வைரலாக பரவியது. ஆனால் அவர் ஏன் அப்போது காதலை வெளிப்படுத்தினார் என்ற தகவலை இப்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து தீபக் சஹார் கூறுகையில் நான் என்னுடைய காதலியிடம் ஐபிஎல் பைனல் முடிந்த பிறகு தான் என்னுடைய காதலை வெளிப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் சிஎஸ்கே-வின் கேப்டனான எம்எஸ் தோனி என்னை அழைத்து நீ பிளே ஆஃபிற்கு முன்பே காதலை வெளிப்படுத்தி விடு அப்போதுதான் உன்னால் விளையாட்டில் ஆர்வம் காட்ட முடியும் என்று கூறினார். இந்த தகவலை தீபக் சஹார் பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

நீங்கள் உங்கள் காதலிக்கு ப்ரபோஸ் செய்யும்பொழுது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? அதிகப்படியான பிரஷரில் இருந்தீர்களா? என்று நெறியாளர் கேட்க, இல்லை நான் அவ்வளவு பிரஷரில் இல்லை. ஆனால் நான் மிகப்பெரிய பிரம்மாண்டமான ஒரு இடத்தில் ப்ரபோஸ் செய்தேன். பொதுவாகவே நான் சற்று கூச்ச சுபாவம் கொண்டவன் ஆனாலும் காதலிக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்றால் கூடுதல் முயற்சியை எடுத்து தானே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஐ.பி.எல் பைனல்ல தோத்தாலே இத்தனை கோடி கிடைக்குமா? அப்போ ஜெய்க்கறவங்களுக்கு எத்தனை கோடி கிடைக்கும். மத்த பரிசுலாம் எவ்வளவு? முழு விவரம் இதோ

டிரெஸ்ஸிங் ரூமில் சிஎஸ்கே அணி எப்படி இருக்கும் என்பதையும் அவர் கூறியுள்ளார். ட்ரெஸ்ஸிங் ரூமை பொறுத்தவரை எங்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. நாம் நமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் அவ்வளவுதான். அதே போல் புதிதாக அணிக்கு வரும் வீரர்களோடு தோனி நிறைய பேசி அவர்களை அணியோடு ஒன்றச் செய்வார். அதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் கொடுப்பார் என்று கூறியுள்ளார் தீபக் சஹார்

- Advertisement -

சற்று முன்