- Advertisement -
Homeவிளையாட்டுநம்ப தீபக் சஹாரா இது... 6, 4 என சரவெடியாய் பரந்த பந்துகள்... ருதுராஜ் ஸ்டைலில்...

நம்ப தீபக் சஹாரா இது… 6, 4 என சரவெடியாய் பரந்த பந்துகள்… ருதுராஜ் ஸ்டைலில் 43 ரன்கள் விலாசி அசத்தல்… கமெண்டில் களாய்த ருது..

- Advertisement-

ஐபிஎல் தொடர் ஆரம்பமான நாளிலிருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் அதே போன்ற தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் T20 தொடரை குறைத்து பத்து T10 தொடராகவும் 100 பந்துகள் கொண்ட தொடராகவும் அது மெருகேற்றப்பட்டும் வருகிறது. இது உலக அளவில் என்றால் இந்திய அளவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து பிரசித்தி பெற்ற தொடராக டிஎன்பிஎல் தொடர் உள்ளது.

தற்போது அந்தந்த மாநிலங்களும் டி என்பிஎல் தொடரை போன்று சில தொடர்களை துவங்கி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டிலிருந்து ராஜஸ்தான் பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை துவங்கியுள்ளது. இதில் ஆறு அணிகள் பங்கு பெறுகின்றனர்.

இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் “ஷேகாவதி சோல்ஜர்ஸ் சிகார்” அணியும் “பில்வாரா புல்ஸ்” அணியும் மோதினர். இதில் டாஸ் வென்று ஷேகாவதி சோல்ஜர்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது அதன் காரணமாக பில்வாரா புல்ஸ் அணி பேட்டிங் ஆட வந்தது. இதில் ஓப்பனிங் வீரரான சுபைர் அலி கான் 0 ரன்கள் எடுத்து அவுட் ஆக, மற்றொரு ஓப்பனிங் வீரரான மீட் பவ்சர் 37 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

அடுத்தடுத்த வீரர்களான ராஜ் ஷர்மா, ரித்திக் சர்மா போன்றோர் சொற்ப ரன்களில் வெளியேற ஐந்தாவது பேட்டராக களத்திற்கு வந்தார் தீபக் சாஹர். இவர் ஒரு பவுலர் தானே என்று நாம் பலரும் நினைத்திருப்போம். ஆனால் தான் ஒரு பவுலர் மட்டுமல்ல மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை இந்த போட்டியில் நிரூபித்து இருந்தார் தீபக் சாஹர்.

- Advertisement-

31 பந்துகளை சந்தித்த அவர் 43 ரன்களை குறித்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடக்கம். அந்தப் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரராக தீபக்சேகர் இருந்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 138.71ஆக இருந்தது. அந்த அணியின் மற்ற வீரர்களான கரண் லம்பா 38 ரண்களும் குணால் சிங் 21 ரன்களும் லகான் பாரதி ஒரு ரன்னும் அடித்திருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது பில்வாரா புல்ஸ் அணி. அதனை தொடர்ந்து களத்திற்கு வந்த ஷேகாவதி சோல்ஜர்ஸ் சிகார் அணி சிறப்பாக ஆடத் தொடங்கியது. ஓப்பனிங் வீரரான அங்கித் 11 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, மற்றொரு ஓப்பனிங் வீரரான ராம்நிவாஸ் கோலடா 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சல்மான் கான் 7 ரன்களில் அவுட் ஆக, மஹிபால் லோம்ரோர் என்பவர் 41 பந்துகளில் 57 ரன்களை விளாசினார்.

அதேசமயம் மற்றொரு வீரரான கார்த்திகே சௌத்ரி 20 பந்துகளில் 36 ரன்கள் விலாசினார். இதன் மூலம் 19 ஓர்களிலேயே அந்த அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரகளை சேர்து அந்த போட்டியில் வென்றது. இதில் தீபக் சார் தான் விளையாடிய சிறப்பான ஆட்டத்திற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இவரது ஆட்டத்தை பொறுத்தவரையில் ருத்ராட்ச் ஸ்டைலில் பல்வேறு சாட்களை இவர் அடித்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த ருதுராஜ், தீபச்சாரை கிண்டல் செய்யும் வகையில் நீங்கள் ஆடிய ஆட்டத்தில் நிறைய டாட் பால்களும் இருந்தன என்று கமெண்ட் செய்திருந்தார். தற்போது இந்த வீடியோ சிஎஸ்கே ரசிகர்களாலும் ராஜஸ்தான் ரசிகர்களாலும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது

சற்று முன்