- Advertisement 3-
Homeவிளையாட்டுஎமோஷனல் ஆன குட்டி பேன்... உலகக்கோப்பையில் மோசமான வரலாறு படைத்த இங்கிலாந்து - நடந்தது என்ன?

எமோஷனல் ஆன குட்டி பேன்… உலகக்கோப்பையில் மோசமான வரலாறு படைத்த இங்கிலாந்து – நடந்தது என்ன?

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடரின் 13வது லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் வெறும் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொத்தமாக இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் மொத்தமாக 8 விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 20 ஓவர்கள் முதல் 30 ஓவர்கள் வரையிலான 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி மற்றும் ரஷீத் கான் இருவரும் 9 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை அதிகரித்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சாளர்களிடம் 8 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து அணியின் ஒரேயொரு ஸ்பின்னரை வைத்து கொண்டு ஜோ ரூட் மற்றும் லிவிங்ஸ்டனை நம்பி களமிறங்கியதால், ஆப்கானிஸ்தான் அணியும் அதிக ரன்கள் குவிக்க காரணமாகியது.

- Advertisement 2-

இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக டெல்லி மைதானத்தில் அதிகளவிலான ரசிகர்கள் கூடினர். அங்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதுடன், ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்ட வீரர்களை உச்சிமுகர்ந்து பாராட்டினர். இதனால் வீரர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது.

இந்த போட்டி முடிவடைந்த பின் டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் முஜீப் உர் ரஹ்மானை கட்டியணைத்த கண்ணீர்விட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அந்த சிறுவனின் செயல் வைரலாகியுள்ளது.

சற்று முன்