- Advertisement -
கிரிக்கெட்

சிஎஸ்கேவுக்கு எதிரா கம்மின்ஸ் செஞ்ச அதே தப்பு.. கொல்கத்தாவுக்கு எதிரான தோல்விக்கு காரணமா இருந்த பந்த் முடிவு..

தொடர் வெற்றிகளால் நடப்பு சீசனில் வீரநடை போட்டு வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி சிறப்பானதாக அமையவில்லை. முதல் ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி, அடுத்த ஐந்தில் நான்கில் வெற்றி பெற்று அபாரமாக விளங்கி இருந்தது.

இதன் மூலம் பத்து போட்டிகளில் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருந்த டெல்லி அணி தங்களின் 11 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர்கொண்டிருந்தனர். அதே தொடர் வெற்றிகளை இந்த போட்டியிலும் செயல்படுத்தினால் இரண்டாவது இடத்திற்கும் முன்னேற்றம் காணலாம் என்ற சூழலில் தான் டெல்லி அணி களமிறங்கி இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்றும் சேசிங் செய்ய நினைக்காமல், முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் டெல்லி கேப்டன் ரிஷப் பந்த். அப்படி ஆடிய டெல்லி அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. இதனால், 111 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே எட்டு விக்கெட்டுகளையும் அவர்கள் இழந்து தவித்தனர்.

அப்படி ஒரு சமயத்தில் தான் யாரும் எதிர்பாராத விதமான ஆட்டத்தை ஒன்பதாவது வீரராக உள்ளே வந்த குல்தீப் யாதவ் வெளிப்படுத்தினார். 26 பந்துகள் சந்தித்த அவர் ஐந்து ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இதனையடுத்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி அப்படியே நேர்மாறான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. பிலிப் சால்ட் பவர் பிளே முடிவதற்குள் 60 ரன்கள் சேர்க்க, அந்த அணியும் 79 ரன்களை எடுத்திருந்தது. பத்து ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்களையும் எடுத்தது.

இதனால் போட்டியும் முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க, மிக எளிதாகவே வெற்றியையும் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 17 வது ஓவரில் கொல்கத்தா அணி இலக்கை எட்டிப் பிடிக்க, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் அவர்கள் ருசித்திருந்தனர்.

இந்த போட்டியில் ஒரு வேளை டாஸ் வென்றதும், தாங்கள் பலமாக இருக்கும் சேசிங்கை டெல்லி எடுத்திருந்தால் வெற்றிக்கு கை கொடுத்திருக்கலாம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், அதிக ரன்கள் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். பேட் கம்மின்ஸ் கூட சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று தாங்கள் பலமாக இருக்கும் ஃபர்ஸ்ட் பேட்டிங்கை எடுக்காமல், சேசிங்கை எடுத்து தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts