- Advertisement -

சிஎஸ்கேவுக்கு குடைச்சலை கொடுத்த டெல்லி கேப்பிடல்ஸ்.. குல்தீப் யாதவ் பத்த வெச்ச ட்விஸ்ட்..

ஐபிஎல் தொடரில் சமீபத்தில் நடந்து முடிந்த சில போட்டிகளில், முதல் பேட்டிங் செய்த அணிகள் குறைவான ரன்களை தான் எடுத்திருந்தது. அப்படி இருக்கையில் தான் தற்போது மீண்டும் ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி, 200 ரன்களை கடந்து அசத்தி உள்ளது. ராஜஸ்தான் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டார்கள் என்று தான் தெரிகிறது.

இதனிடையே, சமீபத்தில் இவர்கள் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்தித்திருந்தனர். டெல்லி அணி 11 போட்டிகள் ஆடி ஐந்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ள நிலையில் அவர்களுக்கு அனைத்து போட்டிகளுமே முக்கியம் என்ற ஒரு சூழலில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு ஆடியிருந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. டெல்லியின் பேட்டிங் லைனில் தூணாக இருந்து வரும் இளம் வீரர் ஜேக் ஃப்ரேஷர் மீண்டும் ஒருமுறை 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். அவரைப் போலவே மற்றொரு தொடக்க வீரர்களான அபிஷேக் போரல் 65 ரன்களை 36 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் எடுக்க, இதன் பின்னர் நடுவே வந்த வீரர்கள் சொற்ப ர்ன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.

இறுதியில் ஆறாவது வீரராக உள்ளே வந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், 20 பந்துகளில் மூன்று ஃபோர்கள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்து டெல்லி அணியின் ரன் ரேட்டை மீண்டும் உயர்த்தி இருந்தார். இப்படி சில வீரர்களின் பங்களிப்பால் அவர்களும் 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்களை எடுத்தனர்.

- Advertisement -

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான அணியில் தூணாக இருந்து பேட்டிங் செய்து வந்தார் கேப்டன் சஞ்சு சாம்சன். ஜெய்ஸ்வால், பட்லர் மற்றும் ரியான் பராக் என மூன்று பேரும் பெரிதாக ரன் சேர்க்காமல் அவுட்டானாலும் சாம்சனின் ஆட்டம் டெல்லி அணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தது.

ஆனால், 5 ஓவர்களில் 63 ரன்கள் வேண்டுமென்ற போது 46 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்த சாம்சன் அவுட்டானது, டெல்லி அணிக்கு ஒரு சிறப்பான கம்பேக்காக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த விக்கெட்டுகளும் ராஜஸ்தான் அணிக்கு விழ தொடங்க, கடைசி 2 ஓவர்களில் 37 ரன்கள் வேண்டுமென்ற நெருக்கடியும் உருவானது.

தொடர்ந்து இந்த போட்டியில், 18 வது ஓவரை வீசி இருந்த குல்தீப் யாதவ், 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார். ஆனால், கடைசி 2 ஒவர்களில் 16 ரன்களை மட்டும் சேர்க்க, டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றியால் அவர்கள் 12 புள்ளிகளை பெற்றுள்ள சூழலில், அவர்களை போல சிஎஸ்கே, லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளும் அதே புள்ளியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts