Homeகிரிக்கெட்டெவோன் கான்வே தேர்வு செய்த சிஎஸ்கே XI. தோனிக்கே இந்த இடம் தான். முக்கிய வீரர்களுக்கு...

டெவோன் கான்வே தேர்வு செய்த சிஎஸ்கே XI. தோனிக்கே இந்த இடம் தான். முக்கிய வீரர்களுக்கு இதில் இடம் இல்லை.

-Advertisement-

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்வித்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற தன்னுடைய பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. குறிப்பாக கடந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி இம்முறை தோனி தலைமையில் மீண்டும் அட்டகாசமாக செயல்பட்டு மாபெரும் ஃபைனலில் ரவீந்திர ஜடேஜாவின் மாஸ் ஃபினிஷிங் காரணமாக சாம்பியன் பட்டம் வென்றது மறக்க முடியாததாக அமைந்தது. அதே போல இந்த வருடம் சென்னை கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறையில் 672 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக மாபெரும் ஃபைனலில் 47 (25) ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் மேத்தியூ ஹெய்டன், மைக் ஹசி, ட்வயன் ஸ்மித், ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது வரிசையில் சென்னை அணியின் சிறந்த வெளிநாட்டு தொடக்க வீரராக செயல்பட்டு வருவது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதிலும் குறிப்பாக சென்னை அணிக்காக நீண்ட காலமாக விளையாடி தற்போது பெங்களூருவுக்காக விளையாடி வரும் டு பிளேஸிஸ் இல்லாத குறையை போக்கும் அளவுக்கு அவர் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருவெடுத்துள்ளார்.

-Advertisement-

ஆம் டைம் லெவன்:
இந்நிலையில் 14 வருடங்களில் 12 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று 10 முறை ஃபைனலில் விளையாடி 5 கோப்பைகளை வென்ற மகத்தான வரலாற்றை கொண்ட சென்னை அணியின் ஆல் டைம் கனவு 11 பேர் அணியை டேவோன் கான்வே தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் ஆல் ரவுண்டராக ப்ராவோவை சேர்க்காத அவர் இந்த வருடம் 16.25 கோடிக்கு வாங்கப்பட்டு வெறும் 2 போட்டியில் மட்டுமே விளையாடிய பென் ஸ்டோக்ஸை சேர்த்துள்ளது ஆச்சரியத்தை கொடுக்கிறது என்றே சொல்லலாம்.

மேலும் பேட்டிங் துறையில் ஹெய்டன், மைக் ஹசி ஆகியோரை தேர்ந்தெடுக்காமல் ருதுராஜை சேர்த்துள்ள அவர் டு பிளேஸிஸை மற்றொரு தொடக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல மிடில் ஆர்டரில் சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ராயுடு, மொய்ன் அலி ஆகியோரை தேர்வு செய்துள்ள அவர் ரசிகர்களின் மனதில் இப்போதும் இடம் பிடித்துள்ள தென்னாப்பிரிக்கா ஆல் ரவுண்டர் அல்பி மோர்கலை தனது அணிக்கு தேர்ந்தெடுத்துள்ளார்.

-Advertisement-

மேலும் ஸ்பின்னராக நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜாவை தேர்ந்தெடுத்துள்ள அவர் வேகப்பந்து வீச்சு துறையில் ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த தமிழகத்தின் லக்ஷ்மிபதி பாலாஜியை மறக்காமல் தேர்வு செய்துள்ளார். அத்துடன் தீபக் சஹாரை வேகப்பந்து வீச்சு துறையில் சேர்த்துள்ள அவர் தனது சென்னை அணியின் கேப்டனாக சந்தேகமின்றி எம்எஸ் தோனியை தேர்ந்தெடுத்துள்ளார். இது பற்றி சென்னை அணி நிர்வாக இணையத்தில் பேசியுள்ள டேவோன் கான்வே தேர்வு செய்துள்ள கனவு 11 பேர் அணி இதோ:

ருதுராஜ் கைக்வாட், ஃபப் டு பிளேஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் – கீப்பர்) , அல்பி மோர்கல், தீபக் சஹர், லட்சுமிபதி பாலாஜி. இதில் தோனியின் செல்லப்பிள்ளையான பதிரனாவுக்கு இடம் இல்லை. அதே சமயம் தோனிக்கு அவர் 8வது இடம் தான் கொடுத்துள்ளார். ஆரம்ப காலத்தில் விளையாடியது போல் இல்லாமல் தோனியே தற்போது கடைசியாக தான் பேட்டிங் செய்ய வருகிறார் என்பதால் தோனிக்கு கான்வே இந்த இடத்தை கொடுத்திருக்கலாம்.

-Advertisement-

சற்று முன்