- Advertisement -
Homeவிளையாட்டுஹோட்டலை தாண்டி தோனியால் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு பிட்சும் இப்படி தான் இருந்தது. எல்லாம்...

ஹோட்டலை தாண்டி தோனியால் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு பிட்சும் இப்படி தான் இருந்தது. எல்லாம் தோனியால் தான் – டெவோன் கான்வே பேச்சு

- Advertisement-

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த மே 29-ஆம் தேதி நடைபெற்ற 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. உலக அளவில் பெரிய கேப்டனாக பார்க்கப்படும் தோனியின் தலைமையின் கீழ் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்ற ஆசையில் பல வீரர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் அந்த அளவு தோனி தனது கேப்டன்சி மூலம் மைதானத்தில் மேஜிக் நிகழ்த்தக் கூடியவர் என்பதை நாம் இந்த தொடரில் கூட பார்த்திருக்கிறோம்.

நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான விக்கெட் கீப்பிங்கை வெளிப்படுத்திய அவர் பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் களமிறங்கி காயத்தை கூட பொருட்படுத்தாமல் சில அட்டகாசமான சிக்ஸர்களையும் விளாசி அசத்தியிருந்தார். இந்நிலையில் சென்னை அணியின் துவக்க வீரரான டேவான் கான்வே ஐபிஎல் அனுபவங்கள் குறித்த சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்தியா முழுவதும் நேசிக்கக்கூடிய ஒரு வீரராக தோனி இருக்கிறார். அவர் தன்னுடைய கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுகிறார். அதே போன்று இந்தியா முழுவதும் அவருக்கு கிடைக்கும் ஆதரவு என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் தோனிக்கு ஆதரவு கிடைக்கிறது. எந்த மைதானத்தில் விளையாடினாலும் எங்களுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது போல இருக்கிறது. அதற்கு காரணம் தோனி ஒருவர் மட்டுமே. அதே சமயம் தோனியால் தான் இருக்கும் ஹோட்டலை தாண்டி வெளியில் எதையும் செய்ய முடியாது. அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் புகழ் என்று கூறியுள்ளார் கான்வே.

அதே போல பிளெமிங் குறித்து அவர் கூறுகையில், பிளெமிங்கிற்கு வீரர்களை எப்படி வழிநடத்தவேண்டும் என்பது நன்றாகவே தெரிந்துள்ளது. அதே சமயம் தோனி மற்றும் சிஎஸ்கே மேனேஜ்மென்ட்டோடும் அவருக்கு நல்ல ஒரு உறவு உள்ளது. அவருடைய சப்போர்ட் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

- Advertisement-

அதே போல சிஎஸ்கே அணியில் தோனியின் கேப்டன்ஷிப் கீழ் விளையாடும் வாய்ப்பை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே நான் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தாலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது போன்ற ஒரு உணர்வை எங்கும் அனுபவித்ததில்லை என கூறியுள்ளார்.

அதே போல சென்னை மைதானத்தை பொறுத்தவரை அது ஒரு ஸ்பின் ஆடுதலாம். அதனால் அணியில் 3 ஸ்பின்னர்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். லக்னோவிலும் அப்படி தான். ஆனால் மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என டெவோன் கான்வே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்