- Advertisement -
Homeவிளையாட்டுஒரு வார்த்தைய சொல்லி சொந்த மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்த கான்வே. இனிமே பாத்து பக்குவமா...

ஒரு வார்த்தைய சொல்லி சொந்த மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்த கான்வே. இனிமே பாத்து பக்குவமா பேசாட்டி அவ்ளோ தான் போல

- Advertisement-

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 171 ரன்களை விரட்டியடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்றது. சிஎஸ்கேவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, துரத்தலின் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே வின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 25 பந்துகளில் 47 ரன்களை குவித்ததற்காக ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதை வென்றார், அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸ் இலக்கை துரத்துவதை எளிதாக்கியது. இந்த நிலையில், பைனல் முடிந்து பேசிய அவர், “ஐபிஎல் 2023 கோப்பையை வென்றது தான் தன் கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய வெற்றி என்றும் இதை விட பெரிய வெற்றி வேறெதுவும் இல்லை” என்றும் கூறினார்.

அதே சமயம் தோனி தலைமையிலான அணியில் தனது அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார். சிஎஸ்கே நிர்வாகம் தன் மீது தொடர்ச்சியாக வைத்த நம்பிக்கை தான் தன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்றும் கூறினார். இந்த அனுபவம், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு சிறப்பாக தயாராக தனுக்கு உதவும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு ஐபிஎல் முடிவில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அதனால் ஐபிஎல் குறித்த ஒரு நல்ல புரிதல் எனக்கு வந்தது. மைக் ஹஸ்ஸிக்கு நான் நன்றிகளை தெரிவிக்கிறேன். இது ஒரு நல்ல அனுபவம் என்று கூறினார்.

- Advertisement-

கான்வே, இப்படி நிறைய பேசி இருந்தாலும், “ஐபிஎல்-இல் பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றி வேறெதுவும் இல்லை” என கூறி இருந்தது நியுசிலாந்தின் சில ரசிகர்களை வருத்தமடைய செய்தது. உடனே அவர்கள், 2021 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வென்றதை விட ஐபிஎல் வெற்றி பெரிதா என விமர்சிக்க துவங்கினர்.

இதன் விளைவாக இப்போது தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்ட கான்வே, “இது எனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த வெற்றி என்று நான் கூறமாட்டேன். ஆனால் நிச்சயமாக எனது வாழ்க்கையின் சிறந்த டி20 வெற்றி அல்லது சாதனை என்று கூறுவேன் என்று கூறி உள்ளார்.

சற்று முன்