CSK vs DC: சிக்சர் மழையால் அரங்கத்தை அதிரவைத்த தோனி. காது பத்திரம் என அலெர்ட் செய்த ஐ வாட்ச். 4 பந்துகளில் 18 ரன்கள் விளாசிய வீடியோ

- Advertisement -

ஐபிஎல் 2023-ன் 55 ஆவது லீக் போட்டி சென்னை மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையே நேற்று சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து சென்னை அணி சார்பாக தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களமிறங்கினார்கள். டெல்லி அணியின் சிறப்பான பவுலின் காரணமாக தொடக்க வீரர்கள் சற்று தடுமாறினார்கள் என்றே கூறலாம்.

அந்த வகையில் டெவோன் கான்வே 13 பந்துகளை எதிர்கொண்டு பத்து ரண்களை எடுத்து அக்சார் பட்டேல் வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆகி வெளியேறினார். அதேபோல் ருதுராஜும் 18 பந்துகளில் 24 ரன்களை எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் வீசிய பந்தில் ஹக்கீம் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்களான ரகானே, மொயினலி, சிவம் தூபே இப்படி யாருமே ஐம்பதை தொடவில்லை. ரகானே 21 ரன்களோடும், மொயினலி ஏழு ரன்களோடும், சிவம் தூபே 25 ரன்களோடும், வெளியேறினார். ஒரு கட்டத்தில் ஜடேஜாவும் எம் எஸ் தோனியும் களத்தில் இருக்க ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது.

எம் எஸ் தோனி 9 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் விலாசினார். இதில் ஒரே ஓவரில் அவர் அடித்த 18 ரன்கள் தான் நேற்றைய போட்டியின் ஹைலைட்டாக இருந்தது. அதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரையும் அடக்கம். இறுதியாக தோனியும் மிட்சல் மார்ஷ் வீசிய பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

தோனி காலத்தில் இருந்த சமயத்தில், அரங்கத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கரகோசமானது அதிகப்படியாக இருந்தது. இந்த நிலையில் அங்கு ஒருந்த ஒருவர் தனது கையில் கட்டி இருந்த ஐ வாட்சில் வந்த அலெர்ட்டை போட்டோ எடுத்துள்ளார். அதில் இது போன்று ஒரு சத்தம் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் இருந்தால் காது செவிடாக வாய்ப்புண்டு என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு முன்பே ஜடேஜாவும் அவுட் ஆனார். அவர் 16 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்கள் எடுத்திருந்தார். அவரும் சிக்ஸ் அடுக்க முயன்று அக்சார் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது.

சென்னை அணியை தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவர் முடிவில் எட்டு வைக்கட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக சென்னை அணி நேற்றைய போட்டியில் சிறப்பான ஒரு வெற்றியை பெற்றது.

- Advertisement -

சற்று முன்