- Advertisement -
Homeவிளையாட்டுரசிகர்களுக்கு பிரியா விடை கொடுத்த தோனி - ஒருவேள ரிட்டையர் ஆகிடுவாரோ என கலக்கத்தில் எழுந்து...

ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுத்த தோனி – ஒருவேள ரிட்டையர் ஆகிடுவாரோ என கலக்கத்தில் எழுந்து நின்று ஆர்ப்பரித்த ரசிகர்கள்

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மிக முக்கியமான போட்டியில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல CSK அணிக்கு அடுத்து நடைபெறும் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே அந்த போட்டியில் தோற்று RCB, மும்பை இந்தியன்ஸ் அல்லது லக்னோ அணிகள் தங்கள் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால், சென்னை ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழக்கும்.

நேற்றைய போட்டிதான் சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் போட்டியாக அமைந்தது. இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணியினர் மைதானத்தை சுற்றி வந்து சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது தோனி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்தனர்.

தோனி, இந்த நிகழ்வின் போது முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருக்கு அவரது சட்டையில் கையெழுத்திட்டார். மேலும் ரசிகர்களுக்காக சில அன்பளிப்புகளை கேலரிகளை நோக்கி வீசினார். இந்த செயல்கள் எல்லாம் ரசிகர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்ப துவங்கி உள்ளது. ஒருவேளை இது தான் சென்னையில் அவர் கடைசியாக விளையாடும் போட்டியா, இனிமே விளையாடவே மாட்டாரா, தோனி ஓய்வு பெற போவது உறுதியா என பல குழப்பங்கள் உள்ளன.

தற்போது 41 வயதாகும் தோனி, ஐபிஎல் விளையாடும் வீரர்களில் அதிக வயதுடைய வீரராக உள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆறுதலளிக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்னர் தோனி மோரிசனோடு பேசிய அவர் “நீங்கள்தான் இது என்னுடைய கடைசி ஐபிஎல் என்று முடிவெடுத்திருக்கிறீர்கள்” என பேசியிருந்தார்.

- Advertisement-

அதனால் தோனியின் மனதில் என்ன உள்ளது என்பது இதுவரை தெரியவில்லை. ஒரு வேளை ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றியோடு விடைபெறவேண்டும் என்று நினைக்கிறாரோ எனவும் தோன்றுகிறது.

சற்று முன்