- Advertisement -
Homeவிளையாட்டுஒரே ஒரு போன் கால் தான். தோனி இல்லாட்டி நான் சிஎஸ்கேல இல்ல. பிராவோ போட்ட...

ஒரே ஒரு போன் கால் தான். தோனி இல்லாட்டி நான் சிஎஸ்கேல இல்ல. பிராவோ போட்ட நெகிழ்ச்சி பதிவு

- Advertisement-

16 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் மே 29 ஆம் தேதியோடு நிறைவு பெற்றன. இந்த முறை தங்கள் ஐந்தாவது கோப்பையை வென்று கொண்டாட்டத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. தோனி தலைமையிலான அணிக்கு கடந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்த நிலையில் இந்த ஆண்டு கோப்பையை வென்று கம்பேக் கொடுத்துள்ளனர்.

இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி, அடுத்த ஆண்டு விளையாட ஆசைப்படுவதாக சொன்னது இரண்டாவது லட்டாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. இந்த சீசனில் பவுலிங் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு கலக்கிய சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அணியின் பந்துவீச்சு ஆலோசகரான டுவெய்ன் பிராவோ தோனி பற்றியும் சிஎஸ்கே அணி பற்றியும் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “நான் எங்கே இருந்து தொடங்குவது. ஒரு வருடத்திற்கு முன்பு நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். அது ஒரு சோகமான தருணம் ஆனால் அதே நேரத்தில் வெற்றிகரமான ஐபிஎல் வாழ்க்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன்.

சென்னை கேப்டன் தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் பிளமிங் ஆகியோரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் என்னை பயிற்சி ஊழியர்களில் ஒரு பகுதியாக இருக்க அழைத்தனர். எனது புதிய கிரிக்கெட் வாழ்க்கையை இந்த திசையில் கொண்டு செல்ல விரும்பினேன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை

- Advertisement-

ஒரு கிரிக்கெட் வீரராக கடவுள் கொடுத்த திறமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எப்போதும் என் மனதில் இருந்தது. இப்போது ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றின் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளேன். சீசன் முழுவதும் எங்களை ஆதரித்த எங்கள் ரசிகர்கள் அனைவரும் உண்மையான சாம்பியன்கள். நாங்கள் செல்லும் இடமெல்லாம் ஒவ்வொரு ஆட்டத்திலும் எப்போதும் மஞ்சள் கடல்; உங்கள் தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் எப்போதும் நன்றி.

இந்த சிறந்த வெற்றிக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மறக்க முடியாத சீசனாக இதை நான் கருதுகிறேன். என்னை அரவணைத்ததற்காக பயிற்சி ஊழியர்களுக்கு நன்றிகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. பயிற்சியாளர் குழுவின் இளைய உறுப்பினர்களில் ஒருவராக இது எனக்கு ஒரு பெரிய கற்றல் செயல்முறையாக இருந்து வருகிறது. நான் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருகிறேன்.

பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் பற்றி குறிப்பாக குறிப்பிட வேண்டும். உண்மையிலேயே அவருடன் இணைந்து பணியாற்றுவதும் கற்றுக்கொள்வதும் நல்ல கூட்டணியைப் போல உணர்ந்தேன். இளம் பந்துவீச்சு குழுவான ஜடேஜா, மதீஷா பதீரனா மற்றும் தீபக் சஹார் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என நெகிழ்ந்து பதிவு செய்துள்ளார்.

சற்று முன்